தெகுரான் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி

தெகுரான் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Tehran International Book Fair) ஈரான் நாட்டு தெகுரான் நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியாகும். தெகுரானில் உள்ள கிராண்ட் பிரார்த்தனை மைதானத்தில் 120,000 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

ஈரானிய தலைநகரின் மொசல்லா-இ தெகுரான் தளத்தின் வளாகத்தில் பொது புத்தகங்களுக்கான பிரதான மண்டபம்
29ஆவது தெகுரான் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி

மனிதநேயம், மதம், தத்துவம், இலக்கியம், சமூக அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை, இந்தத் துறையுடன் தொடர்புடைய தூய மற்றும் பயன்பாட்டு அறிவியல் சார்ந்த புத்தகங்கள் போன்றவை இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. தெகுரான் புத்தகக் கண்காட்சி இதன் யூத எதிர்ப்பு மற்றும் பெரு இன அழிப்பு மறுப்பு இலக்கியங்களுக்காக அவதூறு எதிர்ப்பு அமைப்பால் விமர்சிக்கப்பட்டது. இங்கு குறிப்பிடத்தக்க வகையில் உருசியப் போலி இலக்கியமான தி புரோட்டோகால்ஸ் ஆஃப் தி எல்டர்சு ஆஃப் சீயோன் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதியான டேவிட் டியூக்கின் புத்தகங்கள் இடம்பெற்றன.[1][2] நாடுகடத்தப்பட்ட எதிர்ப்புக் குழுவான ஈரானின் பீப்பிள்சு மொசாயெதின் அமைப்பு புத்தகங்களை தணிக்கை செய்து தடை செய்ததற்காகவும் இந்த கண்காட்சி விமர்சிக்கப்பட்டது.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tehran Book Fair To Feature Works By Anti-Semites, Holocaust Deniers". Asl.org. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
  2. "Tehran International Book Fair". Unitedagainstnucleariran.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
  3. "Foreign publications and Sunnis' books banned in Tehran Book Fair". Ncr-iran.org. 10 May 2016. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.

புற இணைப்புகள்

தொகு