லாகூர் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி

பாக்கித்தானில் ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி

லாகூர் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி (Lahore International Book Fair) பாக்கித்தான் நாட்டின் லாகூரில் நடைபெறும் மிகப்பெரிய மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் பனாட்டு புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாகும். [1] லாகூரில் உள்ள இயோகர் நகரில் உள்ள எக்சுபோ மையத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி பல்வேறு தரப்பு மக்களை ஈர்க்கிறது. [2] இந்நிகழ்ச்சி லாகூர் நகரத்தில் நடைபெறும் ஒரு குறிப்பிடத்தக்க கல்வி மற்றும் கலாச்சார நிகழ்வாகும். [3] [4]

லாகூர் வெளியீடுகளுக்கான மையமாக இருந்து வருகிறது, இன்றுவரை பாக்கித்தானில் 80 சதவீதத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இங்குதான் வெளியிடப்படுகின்றன. மேலும் பாக்கித்தானில் இலக்கியம், கல்வி மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் மையமாக லாகூர் உள்ளது. [3] இசுலாம், வரலாறு, கல்வி, கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வணிக மேலாண்மை, மருத்துவ அறிவியல், விவசாயம், இலக்கியம், சட்டம் மற்றும் குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுமார் 165 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வெளியீட்டாளர்கள் மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் புத்தகக் கண்காட்சியில் அரங்கங்களை அமைக்கின்றன, [5] மத்திய கிழக்கு, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற பிராந்தியங்களில் இருந்து வெளிநாட்டு வெளியீட்டாளர்கள் புத்தகக் கண்காட்சியில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். [6] இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சியானது, கோவிட் பெருந்தொற்று காரணமாக 3 வருட இடைவெளிக்குப் பிறகு, வசந்த காலத்தில் நடைபெறும் முதல் புத்தகக் கண்காட்சியாக மார்ச் 1 முதல் 5 வரை நடைபெற்றது. [7]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Books galore: Lahore International Book Fair opens its doors, Express Tribune
  2. Book fair concludes
  3. 3.0 3.1 Daily Times – Leading News Resource of Pakistan பரணிடப்பட்டது 2008-02-12 at the வந்தவழி இயந்திரம்
  4. "UPCOMING EVENTS". expolahore.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-31.
  5. Lahore book fair gets tremendous response
  6. 25th Lahore Book Fair opens today | Pakistan | News | Newspaper | Daily | English | Online
  7. http://libftrust.com/

புற இணைப்புகள் தொகு