தெக்கினீசியம்(III) புரோமைடு
தெக்கினீசியம்(III) புரோமைடு (Technetium(III) bromide) என்பது TcBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெக்கினீசியமும் புரோமினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தெக்கினீசியம்(III) புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 25946365 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Br3Tc | |
வாய்ப்பாட்டு எடை | 337.71 g·mol−1 |
கரையாது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதெக்கினீசியம் உலோகத்துடன் தனிமநிலை புரோமினை 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்தால் தெக்கினீசியம்(III) புரோமைடு உருவாகிறது.[1]
இயற்பியல் பண்புகள்
தொகுPmmn என்ற இடக்குழுவில் (a = 11.0656(2) Å, b = 5.9717(1) Å, c = 6.3870(1) Å என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் செஞ்சாய்சதுரப் படிகக் கட்டமைப்பில் தெக்கினீசியம்(III) புரோமைடு படிகமாகிறது. [1] RuBr3 மற்றும் MoBr3 போன்ற சேர்மங்களுடன் தெக்கினீசியம்(III) புரோமைடு ஒத்த வடிவியல் உருவத்தைக் கொண்டுள்ளது[1]
தெக்கினீசியம்(III) புரோமைடு பல வாரங்களுக்கு காற்றில் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும். பொதுவாக கரிமக் கரைப்பான்களில் கரையாது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Poineau, Frederic; Rodriguez, Efrain E.; Forster, Paul M.; Sattelberger, Alfred P.; Cheetham, Anthony K.; Czerwinski, Kenneth R. (28 January 2009). "Preparation of the binary technetium bromides: TcBr3 and TcBr4". Journal of the American Chemical Society 131 (3): 910–911. doi:10.1021/ja808597r. பன்னாட்டுத் தர தொடர் எண்:1520-5126. பப்மெட்:19115848. https://pubmed.ncbi.nlm.nih.gov/19115848/. பார்த்த நாள்: 19 July 2024.
- ↑ Sattelberger, Alfred (1 January 2009). "Preparation of the Binary Technetium Bromides: TcBr 3 and TcBr 4". Journal of the American Chemical Society. https://www.academia.edu/16176914. பார்த்த நாள்: 19 July 2024.