தெக்கெகுடி குகைக் கோயில்
கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டதில் உள்ள குகைக்கோயில்
தெக்கெகுடி குகைக் கோயில் (Thekkekudi cave temple) என்பது கேரளத்தின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு குகைக் கோயிலாகும். இங்கு உள்ள முதன்மைதெ தெய்வம் சிவன் ஆவார். தெக்கெகுடியானது திருவல்லாவிலிருந்து 9 கி.மீ. தொலைஇல் உள்ளது. பல்லவர் காலக் கட்டடக்கலை பாணியில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அமைக்கபட்ட இந்தக் குகைக் கோயில் 50 அடி உயரப் பாறையில் அமைக்கபட்ட குடைவரைக் கோயிலாகும். கேரள கலைப் பாணிக்கான ஆதி மாதிரியாக இக்கோயிலின் செதுக்கு வேலைகள் கருதப்படுகின்றன. இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணிவரையும், மாலை 5 மணிமுதல் 7 மணிவரையும் திறந்திருக்கும். மகா சிவராத்திரி அன்று தெக்கெகுடி உற்சவத் திருவிழா நடக்கிறது.[1]