தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் அம்பாறை ஒலுவிலில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பத்தாவது தேசிய (அரச) பல்கலைக்கழகமாகும். இது அம்பாறையின் கரையோர மாவட்டமான ஒலுவிலில் கொழும்பிலிருந்து ஏறத்தாழ 350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
![]() | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1995 |
துணை வேந்தர் | கலாநிதி இஸ்மாயில் |
கல்வி பணியாளர் | பிரயோக விஞ்ஞான, வர்த்தகம், முகாமைத்துவமும் வர்த்தகமும், கலை,கலாசாரம் ,இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடம் மற்றும் பொறியியல் பீடம் . |
அமைவிடம் | , , |
இணையதளம் | தென்கிழக்குப் பல்கலை |
இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர், முஸ்லிம் காங்கிரசின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் ஆவார். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 1978 ஆம் ஆண்டு 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 24ம் பிரிவுக்கமைய பல்கலைக்கழக கல்லூரியாக 1995 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் நிறுவப்பட்டது. பின்னர் அது 1995ம் ஆண்டு மே 15 ஆம் திகதி சுயாதீனமான பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டது.
2004ம் ஆண்டு தொடக்கம் வெளிவாரியாகவும் மாணவர்களுக்கு பட்டப்பாடநெறிகளை ஆரம்பித்தது.
கலைமாணி(பொது-வெளிவாரி),
வணிகமாணி(பொது-வெளிவாரி),
வியாபார நிர்வாகமாணி(பொது-வெளிவாரி),
2011 ன் ஆரம்பத்தில் இருந்து வியாபார முகாமைத்துவத்தில் முதுமானி பட்டத்திற்கான கற்கையினையும் (MBA) ஆரம்பித்துள்ளது.