ஒலுவில் இலங்கையின் கிழக்குக் கரையோரப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்டது. இது அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் பாலமுனைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இங்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகமும், தென்கிழக்குத் துறைமுகமும் அமைந்துள்ளன.

ஒலுவில்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+6 (Summer time)

சேனநாயக்கா நீர்த்தேக்கத்திலிருந்து இருந்து வெளியேறுகின்ற நீர் இறுதியாக கடலுடன் சங்கமிக்கின்ற ‘கழியோடை’ என்கின்ற வற்றாத நீரோடையுடன் காணப்படுகின்ற விசாலமான ஆறு இக்கிராமத்தின் வடபகுதி முழுவதும் நிறைந்து காணப்படுவது இக்கிராமத்திம் சிறப்பாகும்.

தென்னைப் பயிர்ச் செய்கை இங்கு பிரபலமானது. இக்கிராம மக்களில் பலர் தென்னை மூலம் கிடைக்கும் தும்பினால் கயிறு, தும்புத்தடி போன்ற பல பொருட்களை சிறு குடிசைக் கைத்தொழிலாக உற்பத்தி செய்து வருகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலுவில்&oldid=2770958" இலிருந்து மீள்விக்கப்பட்டது