தென்னிந்திய பண்பாட்டுச் சங்கம், ஐதராபாத்
தென்னிந்திய பண்பாட்டுச் சங்கம், ஐதராபாத் (South Indian Cultural Association, Hyderabad, SICA) என்பது கர்நாடக இசை மற்றும் நடனத்திற்காக நடத்தப்படும் இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்த அமைப்பின் முக்கிய பணி, ரவீந்திர பாரதியில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் போன்ற கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாகும். [1]
உருவாக்கம் | 1959 |
---|---|
தலைமையகம் | ஐதராபாது, இந்தியா |
முக்கிய நபர்கள் | முனைவர் சக்கரவர்த்தி, இ.ஆ.ப., (ஓய்வு) தலைவர், ஆர்.சக்கரபாணி (செயலாளர்) |
வலைத்தளம் | இணையதளம் |
புகழ்பெற்ற பாரம்பரிய இசை மற்றும் நடனக் கலைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பிரசங்கங்கள், நாம சங்கீர்த்தனங்கள் மற்றும் அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் போன்றவைகளை இத்திருவிழாவின் போது நிகழ்த்துகிறார்கள்.
வரலாறு
தொகுஇச்சங்கம் [2] 1959 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், இசைக் கச்சேரிகளைக் காண்பதற்காக நிறுவப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் பொன்விழாவைக் கொண்டாடும் இதன் ஒரு வருட கால கொண்டாட்டங்கள் 16 ஆகஸ்ட் 2009 அன்று ஐதராபாத்தில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளோடு நிறைவடைந்துள்ளன.
கிருஷ்ண கான சபா என்ற ஒரே ஒரு அமைப்பு மட்டுமே இசைக்காகவும் கலைக்காகவும் இயங்கிவந்த நிலையில் சில கலை ஆர்வலர்கள் ஒன்று கூடி1959 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி ஐதராபாத்தில் தென்னிந்திய கலாசார சங்கத்தை தோற்றுவித்தனர்.
இந்த அமைப்பு மாநில அரசால் "ஏ" தர பண்பாட்டு நிறுவனமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
கலைஞர்களின் பட்டியல்
தொகுபல ஆண்டுகளாக இந்த அமைப்புக்காக இசையமைத்த கலைஞர்கள் பின்வருமாறு:
- மங்கலம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா
- மதுரை டி.என்.சேஷகோபாலன்
- கத்ரி கோபாலநாத்
- ஊர்மிளா சத்தியநாராயணா
- என். ரமணி
- நெடுநூரி கிருஷ்ணமூர்த்தி
- ஐதராபாத் சகோதரர்கள்
- ஐதராபாத் சகோதரிகள்]]
- என். சி. எச். பார்த்தசாரதி
- வாணி ஜெயராம்
- ஜி. ஜே. ஆர். கிருஷ்ணன்
- கார்த்திக் சேஷாத்ரி
- உ. ஸ்ரீநிவாஸ்
- சசாங்க் சுப்பிரமண்யம்
- ஜெயப்பிரதா ராமமூர்த்தி
- பி. உன்னிகிருஷ்ணன்
- பிரியா சகோதரிகள்
- சஞ்சய் சுப்ரமணியன்
- சுதா ரகுநாதன்
- நித்யஸ்ரீ
- பார்வதி ஸ்ரீநிவாஸ்
- மல்லேனாதி ஸ்ரீனிவாஸ்
- நித்யஸ்ரீ பர்வலா
- மகாதேவன் ரெட்டி
- பந்துல ராமா
விழா நிகழ்ச்சி
தொகுகடந்த கால நிகழ்வுகள்
தொகு- 20 மார்ச் 2011 - எஸ். ஷஷாங்க், புல்லாங்குழல்
- 21 மார்ச் 2011 - மதுரை டி.என்.சேஷகோபாலன், குரல்
- 22 மார்ச் 2011 - சுதா ரகுநாதன், குரல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archive News". தி இந்து. 2008-08-15. Archived from the original on 2008-09-22. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
- ↑ "Archive News". தி இந்து. 2008-05-21. Archived from the original on 2012-11-04. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.