தென் மாகாண சபையின் கொடி
தென் மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான தென் மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 1987ம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பயன்பாட்டு முறை | Civil and state கொடி |
---|---|
அளவு | 2:3 |
ஏற்கப்பட்டது | 1987 |
வடிவம் | கையில் சிறு வாளுடன் மஞ்சள் நிறத்தில் அமைந்த ஓடும் சிங்கம் அரக்கு நிற பின்னணியில் உள்ளது. கொடியின் விளிம்பில் மஞ்சள் நிறக் கரை உண்டு. மூலைகளில் அரசிலைகளும், சிங்கத்துக்கு இருபுறமும் சந்திர சூரியர்களைக் குறிக்கும் சின்னங்களும் காணப்படுகின்றன. |
வரலாறு
தொகு1987 ஆம் ஆண்டில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண சபைகள் சட்டம் இல. 42, 1987 ஆகியவற்றின் கீழ் தென் மாகாண சபை உருவாக்கப்பட்ட போது அதற்கான கொடியொன்றின் வடிவமைப்பில் ஆலோசனை வழங்கும் பொருட்டு வல்லுனர் குழுவொன்று அமைக்கப்பட்டது. மாகாணத்தின் வரலாறு, பண்பாடு, சமூகப் பின்னணி போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு கொடிக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.[1]
அமைப்பு
தொகுதென் மாகாணக் கொடி அரக்கு சிவப்பு நிறப் பின்னணியும், மஞ்சள் நிறக் கரையும் கொண்டது. இரத்தச் சிவப்பு நிறச் செவ்வகத்தின் நான்கு மூலைகளிலும் அரசிலைகள் காணப்படுகின்றன. நடுவில் கையில் சிறிய வாளோடு ஓடும் மஞ்சள் நிறத்தாலான சிங்கம் உள்ளது. சிங்கத்தின் இரு புறமும் மேற்புற மூலைகளை அண்டி சூரிய சந்திரர்களின் குறியீடுகள் காணப்படுகின்றன. இக்கொடி பல்வேறு கொடிகள் கலந்த ஒரு வடிவமைப்பு.
சிறிய வாளொன்றை முன் காலொன்றில் பிடித்தபடி ஓடும் சிங்கம் பொறித்த கொடி உருகுணைப் பிரதேசத்தின் கொடியாகக் கருதப்படுகிறது. மேலும், துட்டகைமுணு, அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளன் மீது படையெடுத்துச் சென்றபோது, கொண்டுசென்ற கொடியும் இரத்தச் சிவப்புப் பின்னணியில் ஓடும் மஞ்சள் சிங்கம் பொறிக்கப்பட்டது ஆகும். அத்துடன், தெவிநுவர தேவாலயத்தின் கொடியிலும், அம்பாந்தோட்டை மாவட்டக் கொடியிலும் சூரியனும், சந்திரனும் உள்ளன.[2]