தெமுகே
செங்கிஸ்கானின் தம்பி
தெமுகே (1168 – 1246) செங்கிஸ் கானின் கடைசித் தம்பி ஆவார். எசுகெய் மற்றும் ஓவலுனின் நான்காவது மகன் ஆவார். மங்கோலியர்களின் இரகசிய வரலாறின் படி இவர் தெமுசினை விட 6 வயது இளையவர் ஆவார். குடும்பத்தில் கடைசிப் பையனாக இருந்ததால் இவர் பெயருக்கு முன்னால் "ஒட்சிகின்" என்ற பெயருடன் அழைக்கப்பட்டார். இது "ஒட்கோன்" என்பதன் சுருக்கம் ஆகும். இதன் பொருள் "இளையவர்" என்பது ஆகும். இவர் ஒரு ஆடம்பர விரும்பியாக இருந்தார். எனினும் போரில் விரைவாகச் செயல்படுபவராக இருந்தார். இது இவரது குடும்பத்தின் எதிரிகளாலும் பாராட்டப்பட்டது. சாமன் கொகோசு தெப் தெங்கிரி அதிகாரத்தைத் தானே எடுக்க ஆரம்பித்தபோது, செங்கிஸ் கான் தெமுகேயை வைத்து ஒரு நடிப்பு மல்யுத்தப் போட்டியில் கொகோசுவைக் கொன்றார்.
பரம்பரை
தொகுஓவலுன் | எசுகெய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
போர்ட்டே | தெமுசின் (செங்கிஸ் கான்) | கசர் | கச்சியுன் | தெமுகே | பெலகுதை | பெக்தர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூச்சி | சகதாயி | ஒக்தாயி | டொலுய் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||