தெய்வச்சிலையார் உரை
தொல்காப்பியம் சொல்லதிகாரப் பகுதிக்குக் கிடைத்துள்ள உரை நூல்களில் தெய்வச்சிலையார் உரையும் ஒன்று. பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வச்சிலையார் இந்த உரையை எழுதினார்.[1][2][3]
உரை பற்றிய செய்திகள்
தொகு- தெய்வச்சிலையார் உரையில் பிற உரையாசிரியர் பற்றிய குறிப்பு இல்லை. அதைப் போலவே பிற உரைகளிலும் தெய்வச்சிலையார் பற்றிய குறிப்பு இல்லை.
- இந்த உரையை விருத்தியுரை என்பர். காரணம் ஒவ்வொரு இயலின் இறுதியிலும் எழுத்தை எண்ணி இத்தனை எழுத்து[4] என்று சொல்கிறார்.
- தனக்குப் புலனாகாத இடங்களில் "விளங்கவில்லை" என இவ்வுரை குறிப்பிடுகிறது.
- சில உரைகள் இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் உரைகளை மறுப்பது போல் காணப்படுகின்றன.
- எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, மணிமேகலை, சூளாமணி ஆகிய நூல்களிலிருந்து மட்டுமே இந்த உரை மேற்கோள்களைத் தருகிறது.
அடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 100.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியீடு, ரா வேங்கடாசலம் பிள்ளை பதிப்பு, 1924
- ↑ தெய்வச்சிலையார் (கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன்) (1963). தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரை. சென்னை 1: சைவ சித்தாந்த நூறுபதிப்புக் கழகம்.
{{cite book}}
: CS1 maint: location (link) - ↑ கிரந்தம்