தெலுங்கு எழுத்துமுறை

(தெலுங்கு எழுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தெலுங்கு பிராமி (தெலுங்கு: ) தென்பிராமி எழுத்துக்களிலிருந்து எழுதப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்து முறையாகும். தெலுங்கு பிராமி எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. தெலுங்கு எழுத்துக்களை கோலமி போன்ற திராவிட மொழிகளை எழுதவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்து உதித்த பல்லவ கதம்ப எழுத்துக்களில் இருந்து தோன்றியது ஆகும்.

தெலுங்கு பிராமி எழுத்துமுறை
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
தற்காலம்
திசைLeft-to-right Edit on Wikidata
மொழிகள்தெலுங்குபிராமி,கோலமி
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
தென் பிராமி
  • கதம்பம்
    • பழைய கன்னடம்
      • தெலுங்கு பிராமி எழுத்துமுறை
நெருக்கமான முறைகள்
கன்னட எழுத்துமுறை
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

தெலுங்கு எழுத்துக்களும் கன்னட எழுத்துக்களும் ஒத்து காணப்படும்.

தெலுங்கு எழுத்துக்களின் தோற்றம்

தொகு

கீழ்க்கண்ட அட்டவணை தெலுங்கு எழுத்துக்கள் வெவ்வேறு காலத்தில் எவ்வாறு மாற்றம் பெற்று தற்கால வடிவை பெற்றன என்பதைக் காட்டுகிறது.

 

எழுத்து வடிவங்கள்

தொகு

உயிர் எழுத்துக்கள்

தொகு
உயிர் எழுத்து உயிரெழுத்து குறி 'ப'கர உயிர்மெய் ஒத்த தமிழ் எழுத்து IPA குறிப்பு
(pa) a short 'a'
పా (pā) long 'a'
ి పి (pi) i short 'i'
పీ (pī) long 'i'
పు (pu) u short 'u'
పూ (pu) long 'u'
పృ (pr) 'ரு' r< தி'ரு'ப்தி என்பதில் ஒலிப்பது போல. ஆனால் தெலுங்கில் ரு'வாகவே ஒலிப்படுகிறது.
పౄ (pr) 'ரு'வின் நெடில் பொதுவழக்கில் இல்லை
'லு'வின் லகர இணை பொதுவழக்கில் இல்லை
'லு'வின் நெடில் பொதுவழக்கில் இல்லை
పె (pe) e
పే (pē)
పై (pai) ai
పొ (po) o short 'o'
పో (pō) long 'o'
పౌ (pau) au
అం పం (paṃ) அம் aṃ அனுஸ்வரம், 'ம்' மற்றும் மூக்கொலிகளுக்கு
అః పః (paḥ) அஹ aḥ விஸார்க்கம், சம்கிருதம் சொற்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது

மெய்யெழுத்துக்கள்

தொகு
தெலுங்கு யூனிகோட் பெயர் ஒத்த தமிழ் எழுத்து IPA
KA k
KHA க்+ஹ kh
GA க - ம'க'ன் g
GHA 'க்' + ஹ gɦ
NGA ŋ
CHA
CHHA ச்+ஹ h
JA
JHA ஜ்+ஹ ɦ
NJA ɲ
TTA ʈ
TTHA ட்+ஹ ʈh
DDA ட - ம'ட'ம் ɖ
DDHA 'ட்'+ஹ ɖɦ
NNA ɳ
THA t
THHA த்+ஹ th
DA த - ம'த'ம் d
தெலுங்கு யூனிகோட் பெயர் ஒத்த தமிழ் எழுத்து IPA
DHA 'த்'+ஹ dh
NA n
PA p
PHA ப்+ஹ ph
BA ப- க'ப'ம் b
BHA 'ப்'+ஹ bɦ
MA m
YA j
RA ɾ
LA l
VA ʋ
SHA () ஸ மற்றும் ஷவிற்கு இடையில் உச்சரிக்க வேண்டும் ɕ
SSA ʃ
SA s
HA ɦ
LLA ɭ
RRA r

பிற குறியீடுகள்

தொகு
குறியீடு பெயர் Function
விராமம் தமிழ் 'புள்ளி' போல, உயிர்மெய் வடிவங்களில் அகரத்தை நீக்குகிறது
அனுஸ்வரம் மூக்கொலிக்கு
விசார்க்கம் எழுத்தின் இறுதியில் 'ஹ'கரத்தை சேர்ர்கும்.

மறைந்த எழுத்து வடிவங்கள்

தொகு

மறைந்த எழுத்து வடிவங்கள் பல 19ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பயன்பாட்டில் இருந்ததாக தெரிகிறது. இதன் பிறகே இவை சிறிது சிறிதாக வழக்கிழந்தன.

நகர பொல்லு

தொகு
 
லோகாந் - இறுதியில் ந பொல்லு

தெலுங்கில் சொல் இறுதியில் நகர ஒற்றெழுத்தை குறிக்க ந பொல்லு அல்லது நகர பொல்லு (వకర పొల్లు) என்னும் எழுத்து வடிவம் பயனப்டுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் இந்த எழுத்து மறைந்து விட்டது. இவ்வெழுத்து 'న్' ஆம் பிரதி செய்யப்பட்டதால் வழக்கிழந்தது.

வலபல கிலக

தொகு
 
கர்த - కర్త

தெலுங்கில், தற்போது ரகர மெய்யொற்றுக்கு பிறகு ஏதேனும் மெய் வந்தால், வருமெய் ஒத்து வடிவில் ரகரத்துடன் இணைந்து விடும். இருப்பினும், பழங்காலத்தில் இன்னொரு முறையும் வழக்கில் உள்ளதாக தெரிகிறது. இதன்படி, வருமெய்யின் வலது புறத்தில் ரகரம் கீற்று வடிவில் காணப்படும், இதுவே வலபல கிலக (వలపల గిలక) என அழைக்கப்படுகிறது. தற்காலத்தில், கன்னடத்தில் இன்னும் இந்த முறை காணப்படுவது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக: கர்ம - ಕರ್ಮ

ட்ஸ மற்றும் ட்ஃஜ

தொகு
 
தெலுங்கு ட்ஸ் மற்றும் ட்ஃஜ்

தெலுங்கில், ட்ஸ்(ṭsa - Dental ca) , ட்ஃஜ(dza - Dental ja) ஆகிய ஒலிகள் உள்ளன. இவை பாளி மொழியின் தாக்கத்தினால் தெலுங்கில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. முற்காலத்தில் இருந்தே இவற்றுக்கு வரிவடிவங்கள் இல்லை என்றாலும், ச, ஜ ஆகியவற்றுக்கான வரி வடிவங்களே இவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இடையில், 18ஆம் நூற்றாண்டில் அப்பகவி என்னும் தெலுங்கு இலக்கணவியலாளர் இவ்வொலிகளை வேறுபடுத்த ச,ஜ வடிவங்களுக்கு கீழ் புள்ளி இட வேண்டும் என கூறுகிறார். எனினும் இது வழக்கில் வந்தாதாக தெரியவில்லை. பின்னர், பிரௌன் என்னும் அறிஞர் 1800களில், மொழியை புதிதாக கற்பவர்களுக்கு உதவுவதற்காக ,சாதாரண ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 1உம் பல்லொலி ச,ஜ வின் மேல் தெலுங்கு எண் 2ஐயும் இட்டு வேறுபடுத்தி, இரண்டு புதிய வரிவடிவங்களை உருவாக்கினார்.எனினும், காலப்போக்கில் ச, ஜ சாதாரணமாக எழுதப்பட பல்லொலிகளுக்கு மட்டும் எண் இரண்டு மேலே எழுதப்பட்டது[1]. ஆந்திர அரசு மொழியை எளிமையாக்கும் விதமாக இந்த எழுத்துக்களை பாட நூல்களில் சேர்க்கவில்லை. இருப்பினும் இவை முற்றிலும் மறைந்து விட்டதாக கூறவியலாது. இவ்வெழுத்துக்கள் யூனிகோட்டின் 5.1 பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

கொலுசு கட்டு

தொகு

ஆங்கிலத்தை போலவே, தெலுங்கிலும் எழுத்துவடிவங்களையும் சேர்த்து எழுதும் கையெழுத்து வடிவம் இருந்துள்ளது. இது கொலுசு கட்டு(గొలుసు కట్టు) என அழைக்கப்படுகிறது. இந்த கையெழுத்து வடிவம் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை வழக்கில் இருந்திருக்கிறது [2] பிறகே இது வழக்கிழந்து விட்டது

எண்கள்

தொகு

தெலுங்கு எண்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன. தற்காலத்தில் தெலுங்கு எண்கள் பொதுப்பயன்பாட்டில் இல்லை. தெலுங்கு இந்தோ-அரேபிய எண்களையே பயன்படுத்துகிறது

தெலுங்கு இந்தோ-அரேபியம்
0
1
2
3
4
5
6
7
8
9

பயன்படுத்தும் விதம்

தொகு
 
15ஆம் நூற்றாண்டை சார்ந்த தெலுங்கு கல்வெட்டு

ஒலிப்பு வேறுபாடுகள்

தொகு

தெலுங்கு ఱ(ற - Trill) ஒரு விஷயத்தில் தமிழிலிருந்து வேறுபடுகிறது. அவ்வெழுத்து சேர்த்து எழுத்தும்போது(ఱ్ఱ) அது தெலுங்கில் 'ற'வை இரட்டித்து ஒலிப்பது(RR - Geminate Trill) போன்றே ஒலிக்கின்றது. ஆனால் தமிழில் ற்ற் என்பது Tra போன்ற ஒலியுடைய ஒன்றாக ஒலிக்கிறது(ஈழவழக்கு:tta).

உதாரணமாக: గుఱ్ఱం(guRRam) - என்பதை தெலுங்கில் குர்ரம் என்பதை ஒத்து ஒலிப்பர். தமிழ் வழக்கில் இது guTram என ஆகிவிடும். (guRRam - குதிரை)

மேலும் தெலுங்கில் பழங்காலத்தில் 'ழ' எழுத்து இருந்தது. ஆனால் காலப்போக்கில் தெலுங்கு மொழியில் 'ழ' 'ட'வாகவும் 'ர'வாகவும் திரிந்ததால் அவ்வெழுத்து வழக்கொழிந்து விட்டது. எ.டு. ஏழு - ఏడు(Edu), கோழி - కోడి(kODi) போன்றவைகளைக் கூறலாம்.

ஒத்து எழுத்து

தொகு

தெலுங்கில் கூட்டெழுத்துக்களைப் பயன்படுத்த ஒத்து எழுத்துக்கள் என்ற முறையினை கடைபிடிக்கின்றனர். ஒத்து எழுத்து என்பது ஒரு மெய் எழுத்து இன்னொரு மெய்யுடன் சேர்த்து எழுதும் போது துணை எழுத்தாக எழுதப்படும். வேகமாக எழுத வேண்டி இவ்வொத்தெழுத்துமுறை கடைபிடிக்கப்பட்டது.

  • కుక్క(kukka) - இதில் இறுதி క(க)விற்கு அடுத்து காணப்படும் எழுத்தே ஒத்து எழுத்தாகும். இதை 'க' ஒத்து என அழைப்பர். 'க' மற்ற மெய்யுடன் இணையும் போது ஒத்து பயயனபடுகிறது. எ.டு. ఎక్కడ(ekkada), నమస్కారం(namaskAram) போன்றவற்றில் 'க' ஒத்து பயன்பாட்டைக் காணலாம்.
  • ஒத்து எழுதும்போது, ஒத்து எழுத்தில் வரவேண்டிய உயிர்க்குறியை அதற்கு முன் உள்ள எழுத்து பெறுகிறது.
  • నమస్కారం(namaskAram) என்பதில் 'க'கரத்துக்கு 'ஆ'கார ஒலிப்பு இருப்பினும், 'க' ஒத்து வடிவில் இருப்பதால், ஆகார குறியை அதற்கு முன் உள்ள மெய்யான స(ஸ) பெற்று స్కా(ஸ்கா) என ஆகிறது.
பிற எழுத்துக்களின் ஒத்து வடிவங்கள்
  • చర్చ(charcha - பேச்சு) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது చ(ச)வின் ஒத்து(ర్చ)
  • వస్తా (vastaa - வருகிறேன் ) - స(ஸ)வுக்கு கீழே இருப்பது త(த)வின் ஒத்து(స్తా)
  • రత్న (ratna - ரத்தினம்) - త(த)வுக்கு அடுத்து இருப்பது న(ந)வின் ஒத்து(త్న)
  • అమ్మ(ammA - அம்மா) - మ(ம)வுக்கு அடுத்து இருப்பது మ(ம)வின் ஒத்து(మ్మ)
  • ఆర్య (Arya - ஆர்ய) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது య(ய)வின் ஒத்து(ర్య)
  • స్పష్ట (SpaShTa - தெளிவு) - స(ஸ)வுக்கு அடுத்து இருப்பது ప(ப)வின் ஒத்து(స్ప)
  • డబ్బు (Dabbu - பணம்) - డ(Da)வுக்கு அடுத்து இருப்பது బ(ba)வின் ஒத்து(బ్బు)
  • ఇల్లు (illu - இல்லம்) - ల(ல)வுக்கு கீழே இருப்பது ల(ல)வின் ஒத்து(ల్లు)
  • నవ్వు(navvu - சிரிப்பு) - వ(வ)வுக்கு அடுத்து இருப்பது వ(வ)வின் ஒத்து(వ్వు)
  • దర్శనం(darshanam - தரிசனம்) - ర(ர)வுக்கு அடுத்து இருப்பது శ(sha)வின் ஒத்து(ర్శ)
  • గ్రామం (grAmam - கிராமம்) - గ(ga)வுக்கு கீழே இருப்பது ర(ர)வின் ஒத்து(గ్రా). 'ர'ஒத்தை எழுத்தின் முன் புறமும் எழுதுவது உண்டு.
  • క్ష - க்ஷ

மற்ற எழுத்துக்களின் ஒத்து வடிவங்களை அவ்வெழுத்துக்களை சுருக்கி கீழே எழுதினால் பெறலாம்

  • కష్టం(kaShTam - கஷ்டம்), వర్షం(varSham - மழை) போன்றவற்றில் ట(ட),ష(ஷ) ஆகியவற்றின் ஒத்து வடிவங்களை சுருக்கி கீழே எழுதுவதினால் வருவதை காண்க(ష్ట, ర్ష)

மேற்கூறிய ஒத்து உயிர்க்குறி விதியில் ஒரே ஒரு விதி விலக்கு உள்ளது. 'ப'வின் ஒத்து 'உ'கரக்குறியினை மட்டும் பெற இயலும், அதுவும் இன்னொரு 'ப'வுடன் இணைந்திருந்தால் மட்டுமே.

  • తప్పు(tappu - தப்பு)- இதில் 'ப'வுடன் இணைந்துள்ள 'ப' ஒத்து உகர உயிர்க்குறி(ppu) பெறுவதை காண்க. இதே போல் உப்பு(ఉప్పు) போன்றவை எழுதப்படுகின்றன.

அனுஸ்வர பயன்பாடு

தொகு

அனுஸ்வர்ரம்(தெலுங்கில் - சுன்னா(సున్న -sunna) என்பது எழுத்துக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப உச்சரிக்கப்படுகிறது.

  • ప,ఫ,బ,భ ஆகியவற்றுக்கு முன் பயன்படுத்தும் போது 'ம்' ஒலி(எ.டு. పంపిస్తా - pampistaa, பம்பிஸ்தா - அனுப்பிகிறேன்)
  • క,ఖ, గ,ఘ முன் 'ங்' ஒலி(எ.டு. రంగు - ரங்கு - நிறம்)
  • చ,ఛ,జ,ఝ முன் ஞ் ஒலி(எ.டு. పంజాబ్ - பஞ்சாப்)
  • త,థ,ద,ధ முன் 'ந்' ஒலி(எ.டு. ఎంత(enta) - எந்த - எவ்வளவு)
  • ట,ఠ,డ,ఢ முன் 'ண்' ஒலி(எ.டு. మంట(manTa) - மண்ட - எரிச்சல்)
  • சொல் இறுதியில் 'ம்' ஒலி(எ.டு. రాం - ராம்)

யூனிகோடில் தெலுங்கு

தொகு
    0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
C00        
C10    
C20    
C30             ి
C40          
C50                              
C60          
C70                                  

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2008-05-25.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-23. பார்க்கப்பட்ட நாள் 2008-05-25.

மேற்கோள் நூல்கள்

தொகு
  • Telugu Grammar, Charles Philip Brown - Book First - On Orthography, 1857

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_எழுத்துமுறை&oldid=4183180" இலிருந்து மீள்விக்கப்பட்டது