தெலூரைட்டு அயனி
தெலூரைட்டு அயனி (Tellurite ion) என்பதன் வாய்ப்பாடு TeO32−.என்று எழுதப்படுகிறது. சோடியம் தெலூரைட்டு ஒரு தெலூரைட்டு சேர்மம் ஆகும். இச்சேர்மத்தில் தெலூரைட்டு அயனி உள்ளது. தெலூரைட்டு சேர்மங்கள் மின்னாற்பகுப்பு வினையால் அல்லது வலிமையான ஒரு ஒடுக்கும் முகவரால், ஒடுக்க வினைக்கு உட்பட்டு தனிமநிலை தெலூரைடு உருவாகிறது. இருந்தாலும், பொதுவாக தெலுரைட்டு சேர்மங்கள் உயர்ந்த நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மங்களாகும்.
பெயர்கள் | |
---|---|
முறையான ஐயூபிஏசி பெயர் | |
இனங்காட்டிகள் | |
15852-22-9 | |
ChEBI | CHEBI:30477 |
ChemSpider | 102958 |
Gmelin Reference
|
100741 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 115037 |
| |
பண்புகள் | |
O3Te2− | |
வாய்ப்பாட்டு எடை | 175.6 கி மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமில வடிவம்
தொகுசிறிதளவு அமில நிபந்தனைகளில் ஐதரசன் தெலூரைட்டு அயனி HTeO3- பரவலாகக் காணப்படுகிறது. பெருமளவு அமில நிபந்தனைகளில் தெலூரசு அமிலம் (H2TeO3) எங்கும் பரவியிருக்கிறது. கார நிபந்தனைகளில் மட்டும் தெலூரைட்டு உருவாகிறது.
தயாரிப்பு
தொகுசம்மந்தப்பட்ட ஆக்சைடை தெலூரியம் ஈராக்சைடுடன் சேர்த்து சூடாக்கினால் தெலூரைட்டு சேர்மங்கள் உருவாகின்றன.
எ,கா: Na2O + TeO2 → Na2TeO3
பயன்கள்
தொகுபொட்டாசியம் தெலூரைட்டு (K2TeO3) கடற்பாசி கூழுடன் சேர்க்கப்பட்டு சிலவகை பாக்டீரியாக்களின் வளரிடமாகப் பயன்படுத்தப்படுகிறது. கோரின்பாக்டீயாவும் வேறு சில பாக்டீரியா இனங்களும் தெலூரைட்டு அயனியை தனிமநிலை தெலூரைட்டாக மாற்றுகின்றன. இது பாக்டீரியாவை கருப்பு நிறமாக்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tellurous Acid - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
- ↑ "Tellurite (CHEBI:30477)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute.