தெஹ்ரீக்-இ-நஃபாஸ்-இ-ஷரியத்-இ-மொஹம்மதி

தெஹ்ரீக்-இ-நஃபாஸ்-இ-ஷரியத்-இ-மொஹம்மதி (Tehreek-e-Nafaz-e-Shariat-e-Mohammadi, ஆங்கிலம்: Movement for the Enforcement of Islamic Law) என்பது பாக்கிஸ்தானில் செயல்படும் ஆயுதம் தாங்கிய தீவிரவாத அமைப்பாகும். இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் ஷரியா சட்டத்தை நாடு முழுமைக்கும் திணிப்பதாகும் (enforce). இக்குழுவை 1992 ஆம் ஆண்டு சுபி முஹம்மது என்பவர் உருவாக்கினார். இந்த அமைப்பு 2007 ஆம் ஆண்டு ஸ்வாட் மாவட்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. 2002 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று பாக்கிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என அறிவித்து தடை செய்தார்.[1]

இயக்கத்தை ஆதரிக்கும் சுவர் விளம்பரம்

இந்தக் குழுவானது பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்படுகிறது.[2] பாக்கிஸ்தானின் ஸ்வாட் மற்றும் மலாகந்த் மாவட்டங்களிலும் மேலும் தார்கை மற்றும் செனாங்கி பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுகிறது.[3] இக்குழு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அமைப்பிற்கு உதவி செய்து வருகிறது.[4] இந்த அமைப்பு பாக்கிஸ்தானின் மிகவும் அபாயகரமான அமைப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது."[2] இவ்வமைப்பை உருவாக்கிய சுபி முஹம்மது சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரது மருமகனான மெளலானா ஃபஸ்லுல்லா இதன் தலைவராக இருந்தார்.[1][2] 2008 ஆம் ஆண்டு மாகண அரசுடன் இக்குழு செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையின்படி சுபி முஹம்மது விடுதலை செய்யப்பட்டார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Tehreek-e-Nafaz-e-Shariat-e-Mohammadi, Extremist Group of Pakistan". SATP. பார்த்த நாள் 2007-04-19.
  2. 2.0 2.1 2.2 Hassan Abbas (12 April 2006). "The Black-Turbaned Brigade: The Rise of TNSM in Pakistan". Jamestown Foundation. Archived from the original on 2007-09-30. http://web.archive.org/web/20070930192222/http://jamestown.org/news_details.php?news_id=209. பார்த்த நாள்: 2007-04-19. 
  3. Khan, Riaz. "Inside rebel Pakistan cleric's domain", Associated Press report, as it appeared at USA Today Website, October 27, 2007, accessed November 7, 2007
  4. "DARGAI & CHENAGAI: WAITING TO HEAR ZAWAHIRI'S VERSION - INTERNATIONAL TERRORISM MONITOR: PAPER NO. 152". South Asia Analysis Group. மூல முகவரியிலிருந்து 2006-11-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-20.
  5. Toosi, Nahal (2009-02-15). "Taliban to cease fire in Pakistan's Swat Valley". Yahoo News. http://news.yahoo.com/s/ap/20090215/ap_on_re_as/as_pakistan. பார்த்த நாள்: 2009-02-15. [தொடர்பிழந்த இணைப்பு]