தேக்கா நிலையம்
தேக்கா நிலையம் (ஆங்கிலம்:Tekka Centre) என்பது சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பேரங்காடி. இதில் உணவகங்களும், பிற கடைகளும் உள்ளன. இது புக்கிட் திமா சாலையும், செராங்கூன் சாலையும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது.[1] லிட்டில் இந்தியா பகுதியில் நிறுவப்பட்ட முதல் பேரங்காடி இது. இங்கு வட இந்திய, தென்னிந்திய, இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளும், ஆடைகளும் கிடைக்கும். சீன, மலாய் உணவுகள் விற்கும் கடைகளும் உண்டு. இதற்கு அருகில் லிட்டில் இந்தியா தொடருந்து நிலையம் உள்ளது.
சான்றுகள்
தொகு- ↑ "Tekka Centre". Uniquely Singapore website.