தேக்கூர் இராமநாத்

இந்திய மருத்துவர்

தேக்கூர் இராமநாத் (Tekur Ramanath; 31 சூலை 1942) ஓர் இந்திய மருத்துவராவார். இவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் மைசூரில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பின்னர் கர்நாடகாவின் பெல்லாரியிலும் பல ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி கற்பித்து வந்தார். பின்னர் இவர் 2000இல் ஓய்வுபெற்றார். [1] இவர் பல மருத்துவர்களுக்கு அவர்களின் முனைவர் பட்ட ஆய்வுப் பணியின் மூலம் வழிகாட்டியுள்ளார். மேலும் இந்தச் செயல்பாட்டில் கருச்சிதைவு நோய் மற்றும் நிகோடினுக்கு அடிமையாதல் போன்ற பல்வேறு சமூகம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை செய்தார். [2] [3] [4]

மருத்துவர் தேக்கூர் இராமநாத்
தேக்கூர் இராமநாத்
Dr. Tekur Ramanath
பிறப்புசூலை 31, 1942 (1942-07-31) (அகவை 82)
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
கல்விM.B.B.S, M. D., F.I.C.P, F.I.C.C
படித்த கல்வி நிறுவனங்கள்பெங்களூர் மருத்துவக் கலூரி
பணிமருத்துவர்
செயற்பாட்டுக்
காலம்
1974 - 2020
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
கர்நாடகாவின் பெல்லாரியில் உள்ள விஜயநகர மருத்துவ அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குநரும் முதல்வர்.
விருதுகள்பார்கவா சிறந்த ஆசிரியர் விருது (1989), வாழ்நாள் சாதனையாளர் விருது (2019) இந்திய மருத்துவர்கள் சங்கம் (கர்நாடக கிளை), இந்திய மருத்துவக் கழகத்தின் புகழ்பெற்ற சகா (1999)

செஞ்சிலுவை சங்கம் , இந்திய மருத்துவச் சங்கம் போன்ற நிறுவனங்களின் கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு சமூக நலத் திட்டங்களுக்கு இவர் ஆற்றிய மகத்தான சேவைக்காக பெல்லாரி சமூகத்தில் இவர் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். இராமநாத் புகையிலை பழக்கத்தை வெளிப்படையாக விமர்சிப்பவர். மேலும், போதைக்கு அடிமையாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்தியாவில் பெருநிறுவன துறை ஆற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான பங்கைப் பற்றி ஆர்வத்துடன் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். [5] இவர் இந்திய மருத்துவக் கல்லூரி, இந்திய இதயவியல் கல்லூரியின் புகழ்பெற்ற சக ஊழியாராகவும் இருக்கிறார். [6] [7] பெல்லாரியிலும், அல்லிபுரம் சிறைகளில் ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக ஒரு நினைவு அருங்காட்சியத்தை நிறுவுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். [8] [9]

பரம்பரை

தொகு

தேக்கூர் இராமநாத்தின் தந்தை தேக்கூர் சுப்பிரமணியம் இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னணி நபராகவும், மாநில மற்றும் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய செயல்பாட்டாளராகவும் இருந்தார். [10] [11] சுதந்திரப் போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் அவர் நான்கு முறை சிறை சென்றுள்ளார். [12] அவர் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி ஆகியோருடன் நெருங்கிய கடிதத் தொடர்பு கொண்டிருந்தார். 1937 - 1939க்கும் இடையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து சி. ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் முதல் பிரதமராக இருந்தபோது, தேக்கூர் சுப்ரமணியம் அவரது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13] [14] தேக்கூர் சுப்ரமணியத்தின் இளைய சகோதரர் தேக்கூர் கிருட்டிணமூர்த்தி (1902 - 1989) இந்திய நாளிதழான தி இந்துவில் சுமார் மூன்று தசாப்தங்களாக மூத்த பத்திரிகையாளராக இருந்தார். மேலும், 1934இல் பெல்லாரி, செஞ்சிலுவைச் சங்கத்தின் நிறுவன செயலாளராக இருந்தார். தேக்கூர் கிருஷ்ணமூர்த்தி, கர்நாடகாவின் ஆலூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி வாரியத்தின் தலைவராக இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்திய சுதந்திர இயக்கத்திலும் ஈடுபட்டார்.

ஆரம்ப ஆண்டுகளும் கல்வியும்

தொகு

தேக்கூர் இராமநாத், தேக்கூர் சுப்ரமண்யம்- தேக்கூர் மீனாட்சியம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். [15] இவரது ஆரம்பக் கல்வி பெல்லாரியில் உள்ள பள்ளிகளில் இருந்தது. பின்னர், தனது உயர்நிலைக்கல்வியை 1956 - 1958 வரை வார்ட்லா உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். பிறகு, இராமநாத் தனது மருத்துவக் கல்வியைத் தொடர பெங்களூருக்குச் செல்வதற்கு முன்பு வீரசைவக் கல்லூரியில் (1959) பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியைப் பெற்றார். இவர் 1966இல் மருத்துவத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1973ஆம் ஆண்டில் பெங்களூர் மருத்துவக் கல்லூரியிலும் [16] மருத்துவர். எம். மையா மருத்துவக் கல்லூரியிலும் புகழ்பெற்ற மருத்துவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது முதுநிலை மருத்துவத்தை முடித்தார்.

சமூகப் பணிகள்

தொகு

2001 - 04க்கும் இடையில் கர்நாடக மாநில செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இராமநாத் இருந்தார். மத்திய சிறைக் கைதிகளுக்கான குழுவில் உறுப்பினராக இருந்தபோது இவர், சிறைக் கைதிகளுக்கு சிறந்த மறுவாழ்வு வழிகாட்டுதல்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவராக, பல மாநில மற்றும் தேசிய அளவிலான அறிவியல் மாநாடுகளை ஏற்பாடு செய்துள்ளார். இந்த கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள இளைய தலைமுறை மருத்துவர்களுக்கு மருத்துவத்தில் சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ள உதவியுள்ளன.

அங்கீகாரம்

தொகு

தேக்கூர் இராமநாத் இந்திய மருத்துவக் கழகத்தின் (1999) புகழ்பெற்ற சக ஊழியராகவும், இருதய மருத்துவர்கள் கல்லூரியின் புகழ்பெற்ற சக ஊழியராகவும் (1998) இருந்தார். இந்தியாவில் மருத்துவக் கல்வியில் ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக இவரது அர்ப்பணிப்புக்காக 1989இல் மதிப்புமிக்க பார்கவா சிறந்த ஆசிரியர் விருதைப் பெற்றவர். இந்திய மருத்துவர்கள் சங்கம் (கர்நாடக கிளை) மருத்துவத் துறையில் இவரது வாழ்நாள் பங்களிப்பிற்காக 2019இல் இவரை கௌரவித்தது.

சான்றுகள்

தொகு
  1. "Vijayanagar Institute of Medical Sciences (VIMS), Bellary, Karnataka » PunjabColleges.com". www.punjabcolleges.com. Archived from the original on 2021-12-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  2. "DR. CHANDRAGOUDA DODAGOUDAR". drchandragouda.com. Archived from the original on 2021-12-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  3. Ramanath, Tekur (2002). "CLINICAL, RADIOLOGICAL, SEROLOGICAL AND EPIDEMIOLOGICAL STUDY OF BRUCELLOSIS IN TEACHING HOSPITAL" (PDF). Rajiv Gandhi University of Health Sciences.
  4. "Thesis Topic List - ID:5c5d0cf7de5fc". livrosdeamor.com.br (in ஆங்கிலம்). Archived from the original on 2021-12-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  5. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  6. "Indian Academy of Clinical Medicine". www.iacmnational.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  7. "Indian College of Cardiology". www.icc-india.com. Archived from the original on 2021-05-20. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  8. "Memorial to be inaugurated on August 9". https://www.thehindu.com/news/national/karnataka/memorial-to-be-inaugurated-on-august-9/article24627691.ece. 
  9. "Proposal to set up national museum revived". https://www.thehindu.com/news/national/karnataka/proposal-to-set-up-national-museum-revived/article7266369.ece. 
  10. "From the diary of a Gandhian". Deccan Herald (in ஆங்கிலம்). 2012-10-01. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  11. "VIJAYANAGARA INSTITUTE OF MEDICAL SCIENCES". www.nammabellary.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  12. "Famous Personalities from Karnataka". travel2karnataka.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  13. Malagi, Shivakumar G. (2017-08-16). "Ballari's jail walls have many a story to tell". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  14. "Members Bioprofile". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  15. "Living Under a Red Cloud in Bellary". People's Archive of Rural India (in உருது). 2014-12-19. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
  16. Ramanath, Tekur (2021). "Obituary". APIK Journal of Internal Medicine 9 (1): 64. doi:10.4103/ajim.ajim_108_20. பன்னாட்டுத் தர தொடர் எண்:2666-1802. http://dx.doi.org/10.4103/ajim.ajim_108_20. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேக்கூர்_இராமநாத்&oldid=3613839" இலிருந்து மீள்விக்கப்பட்டது