தேசிகர்

தேசிகர் (Desikar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான, தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த தமிழ் மொழி பேசும் சைவ வெள்ளாள சமூகமாகும். இவர்கள் குறிப்பாக பூசாரிகள் மற்றும் நில உரிமையாளர்களாக உள்ளனர்.

வீர சைவர் / தேசிகர் / பண்டாரம் / ஜங்கம் / யோகிஸ்வரர் / கன்னடியர் / கோவம்சம்
வகைப்பாடுசைவ சித்தாந்தம், லிங்காயத் , தமிழ் இலக்கியம்
மதங்கள்சைவ சித்தாந்தம், இந்து சமயம்
மொழிகள்தமிழ்
பரவலாக வாழும் மாநிலங்கள்தமிழ்நாடு, கேரளா
பகுதிதமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா
தொடர்புடைய குழுக்கள்
  • அபிசேகா
  • தேசிகர்

தோற்றம்தொகு

தேசிகர் சமூகம் சைவ மதத்தை பின்படுத்துகின்றனர். இந்த சமூகம் குறிப்பாக லிங்காயத், சைவ சித்தாந்தம் மற்றும் திருமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தேசிகர் என்ற சாதி பண்டாரம் என்ற வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது தமிழில் "முனிவர்" என்று பொருள்.[1] பண்டாரம் என்ற வார்த்தையின் பொருளுக்கு வெவ்வேறு கோட்பாடுகள் உள்ளன. பண்டாரம் என்பது அபிசேகா மற்றும் தேசிகர் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனால் பின்னாளில் தேசிகர் என்ற பெயரையே இச்சமூக மக்கள் பயன்படுத்தினர்.

திருமணம் மற்றும் பழக்கவழக்கங்கள்தொகு

இவர்கள் பிற சாதிகளுடன் திருமண உறவு வைத்துக்கொள்வதில்லை. ஆனால் சிலர் வெள்ளாளர் பிள்ளை மற்றும் சைவ வெள்ளாளர் போன்ற சாதிகளுடன் திருமண உறவு வைத்துக் கொள்கிறார்கள்.

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிகர்&oldid=2961067" இருந்து மீள்விக்கப்பட்டது