சைவ வெள்ளாளர்

சைவ வேளாளர் என்போர் தென்தமிழகத்தில் வாழும் வேத வைதிக நெறியை பின்பற்றும் ஒரு சாதியினர் ஆவர்.

சைவ வெள்ளாளர் அல்லது சைவ வேளாளர் (Saiva Vēlālar) எனப்படுவோர், தமிழர்களின் குலத்தொழில் அடிப்படையில் வேளான்மையைக் குலத்தொழிலாக கொண்டதுடன் சைவ சமய நெறிகளை கடைப்பிடிப்பவர்களாகவும் இருப்பதனால் சைவ வேளாளர் என அறியப்படுகின்றனர். இவர்கள் தமிழ்நாடு, இலங்கை, மட்டுமல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் வாழுகின்ற தமிழ் இனத்தின் ஒரு சமூக குழுவினர் ஆவர். இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்.

இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சைவ உணவை பெரும்பான்மையாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள். வேளாண்மை தொழில் மட்டுமின்றி கணக்காயர்களாகவும், சில அரசர்களிடம் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர்.

வேறுபாடு

இவர்கள் வேளான்மை செய்வதை குலத்தொழிலாக கொண்டவர்கள் என்றாலும், சைவ சமய நெறிகளை கடைபிடிப்பதனால், அல்லது சைவ சமயத்திற்கு முதன்மை இடம் கொடுப்பவர்கள் என்பதனால், சைவ வேளாளர்கள் என ஏனைய வேளாளர் சமூகத்தினரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப் படுத்துகின்றனர். அதேவேளை சைவ கோயில்களில், கோயில் குருக்கள்களாகவும் இவர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.[1] இலங்கை யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை, வேளாளர்கள் என பொதுவாக அடையாளப் படுத்திக்கொண்டவர்கள், கிருத்துவ சமயத்தின் வருகையைத் தொடர்ந்து, கிருத்துவ சமயத்திற்கு மாறியவர்கள் தம்மை கிருத்துவ வேளாளர் என ஒரு தனித்த உட்பிரிவாக அடையாளப்படுத்திக்கொண்டனர். அதேவேளை அவர்களில் இருந்து வேறுபடுத்திக் காட்ட, தொடர்ந்து சைவ சமயத்தை பின்பற்றி வந்த வேளாளர்கள், தம்மை சைவ வேளாளர் என அடையாளப் படுத்திக்கொண்டனர்.[2]

தமிழ்நாடு அரச இட ஒதிக்கீடு

இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட பிரிவில் உள்ளனர்.[3] இவர்களை வட தமிழகத்தில் சைவ முதலியார் என்றும் தென் தமிழகத்தில் சைவப் பிள்ளை என்றும் அழைப்பர்.[4]

குறிப்பிடத்தக்க நபர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
  2. http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4/2/
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-08-26.
  4. பி,புஷ்பம், ed. (1999). தாலாட்டும் ஒப்பாரியும் சமுதாயப்பார்வை. மா பிரிண்டர்ஸ். p. 8. தமிழகத்தின் வடபகுதியில் உள்ள வெள்ளாளர் , முதலியார் என்ற பட்டத்தை இணைத்துக் கொள்ள தென்பகுதியில் உள்ளோர் பிள்ளைமார் என்ற பட்டத்தை இணைத்துக் கொள்கின்றனர் {{cite book}}: no-break space character in |quote= at position 39 (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைவ_வெள்ளாளர்&oldid=3556119" இலிருந்து மீள்விக்கப்பட்டது