தேசிய ஓய்வூதியத் திட்டம்
அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அனைத்து இந்தியக் குடிமக்களும் முதுமைக் காலத்தில் பயன்பெறும் நோக்குடன் இந்திய அரசால் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கு ஏதுவாக, ஓய்வூதியத் திட்டத்தை விரிவுபடுத்தி, அதற்குத் தேசிய ஓய்வூதியத் திட்டம் எனும் பெயர் சூட்டியது. தேசிய ஓய்வூதியத் திட்டம் 01. 05. 2009-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.[1][2]
இந்தப் புதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்படி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாதாமாதம் செலுத்தும் குறைந்தபட்ச தன்பங்களிப்பு தொகை ரூபாய் 1000/- அதிக பட்சம் ரூபாய் 12,000/- உடன் இந்திய அரசு தன் பங்கிற்கு ரூபாய் மாதாமாதம் ரூபாய் குறைந்தபட்சம் ரூபாய் 1000/- அதிகபட்சம் ரூபாய் 12,000/- செலுத்தும். இத்திட்டம் தற்போதைக்கு வரும் 2016-2017 நிதியாண்டு வரை தொடரும். இத்திட்டத்தில் சேர்ந்த சந்தாதாரர்கள் இறக்கும் வரை இந்தியா முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம், ’நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண்’ (PRAN) வழங்கப்படும். நிரந்தர ஓய்வூதியக் கணக்கு, இரண்டடுக்கு தனிநபர் கணக்குகளைக் கொண்டுள்ளது:[2][3]
- கணக்கு அடுக்கு I: இந்த அடுக்கு கணக்கில் சேரும் தொகையை சந்தாதாரர் கணக்கு முடிவுறும்வரை அல்லது ஓய்வு பெறும் வரை திரும்பப் பெறமுடியாது. முடிவு (ஓய்வு)க்காலத்திற்கு பின் தான் இக்கணக்கிலிருந்து சந்தாதாரர் பணத்தைத் திரும்பப் பெறமுடியம். இது ஜனவரி 1, 2001 க்குப் பின் நியமனமான அரசு ஊழியர்களுக்கு இக்கணக்கு கட்டாயமான ஒன்று.
- கணக்கு அடுக்கு II: இந்த அடுக்குக் கணக்கில் சேரும் தொகை சந்தாதாரரின் தன்விருப்ப சேமிப்பு என்பதால், இந்த கணக்கிலிருந்து சந்தாதாரர் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் இத்திட்டத்தில் செலுத்திய தொகையை திரும்பப் பெறலாம். இந்த அடுக்கு II-இல் கணக்கில் சேரும் தொகைக்கு வருமானவரிச் சலுகை இல்லை.
தேசிய ஓய்வூதியத் திட்ட நிதி நிர்வாகம்
தொகுதேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரும் நிதியை நிர்வகிப்பதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்[4] ஒன்றை இந்திய அரசு அமைத்துள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்ட நிதிக் கணக்குகளைக் கையாளும் நிறுவனம்
தொகுதேசிய ஓய்வூதியத் திட்ட நிதிக் கணக்குகளைக் கையாள்வதற்கு, இந்திய அரசு மையக் கணக்கு வைப்பு முகமை (Central Record Keeping Agency) [5] எனும் நிறுவனத்தைத் துவக்கியுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) http://india.gov.in/spotlight/national-pension-system-retirement-plan-all
- ↑ 2.0 2.1 http://pfrda.org.in/indexmain.asp?linkid=185
- ↑ http://india.gov.in/spotlight/national-pension-system-retirement-plan-all
- ↑ PFRDA
- ↑ Central Record Keeping Agency (CRA) CRA (தேசிய ஓய்வூதியத் திட்ட) மையக் கணக்கு பராமரிப்பு முகமை
வெளி இணைப்புகள்
தொகு- புதிய ஓய்வூதிய திட்டம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- [1] பரணிடப்பட்டது 2014-02-18 at the வந்தவழி இயந்திரம்
- http://tamil.goodreturns.in/classroom/2013/06/tax-benefits-the-national-pension-system-001030.html
- http://tamil.goodreturns.in/news/2014/01/22/minimum-rs-1-000-pension-epfo-subscribers-the-works-002022.html
- http://www.vinavu.com/2012/01/17/new-pention-scheme/
- புதிய ஓய்வூதியத் திட்டம்
- தேசிய ஓய்வூதியத் திட்டம்' பற்றித் தெரியுமா?