பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அல்லது புதிய ஓய்வூதியத் திட்டம் (Contributed Pension System or New Pension System) எனும் திட்டத்தை அகில இந்திய அளவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு 01-04-2003 முதல் தமிழ்நாடு அரசுப்பணி, அரசு கல்வி நிலையங்கள் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியில் சேர்ந்தவர்களுக்கும், மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் பயன்படும் வகையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அல்லது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.[1][2]

தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்திய இந்த புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அல்லது புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்திய அரசு ஜனவரி 1, 2004 முதல் மைய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தியது.[3][4]ஆனால் 01. 01. 2004-க்கு முன்பு மைய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எனும் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது.

எனினும், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து இந்திய இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும் எனச் சலுகை காட்டப்பட்டது. இந்திய மைய அரசைப் பின்பற்றி பெரும்பாலான மாநில அரசுகளும் ஜனவரி 1, 2004க்குப் பிறகு பணியில் சேரும் தமது ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தின.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர் மற்றும் அரசின் பங்கு

தொகு

புதிய ஓய்வூதியத் திட்டம் எனும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டப்படி, 01.01.2004 முதல் மைய அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படும் 10 சதவீத வருங்கால வைப்பு நிதிக்கு இணையான தொகையை அவர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் மைய அரசு தன் பங்காகச் செலுத்தும் என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது.[5]

புதிய ஓய்வூதிய திட்ட நிதியை கண்காணிக்கும் நிறுவனம்

தொகு

புதிய ஓய்வுதியத் திட்ட நிதியை மேலாண்மை செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும், ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை (PFRDA) ஏற்படுத்த, ஓய்வூதிய நிதியை ஒழுங்குபடுத்தி வளர்க்கும் ஆணைய மசோதா செப்டம்பர் 4-ஆம் தேதி மக்களவையிலும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றியது மைய அரசு. செப்டம்பர் 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி செப்டம்பர் 19-ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டது.[6]

பங்களிப்பு ஓய்வூதிய நிதி - மைய கணக்கு வைப்பு முகமை

தொகு

புதிய ஓய்வூதிய நிதித் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியநிதித் திட்டம் ஆகியவற்றில் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், ஓய்வூதியநிதித் திட்டத்திற்கு மாதாமாதம் செலுத்தும் பங்களிப்பு தொகை கணக்குகளை பராமரிப்பதற்கு, இந்திய அரசு மையக் கணக்கு வைப்பு முகமை [7]எனும் நிறுவனத்தை துவக்கியது.

புதிய ஓய்வூத்திட்ட நிதியை நிர்வகிக்கும் நிதி மேலாளர்கள்

தொகு

அரசு மற்றும் பொதுத் துறைகளைச் சார்ந்த ஊழியர்களிடமிருந்து மாதாமாதம் பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் என்ற மைய அரசு நிறுவனத்திடமும், அந்த நிதியை முதலீடு செய்யும் பொறுப்பு இந்திய அரசு வங்கியிடமும் இருந்து வந்தது.

இந்நிறுவனங்கள் இந்த நிதியைத் திறம்பட முதலீடு செய்யும் ஆற்றல் கொண்டதாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்யும் பொறுப்பை அரசு நிதி நிறுவனங்கள், தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களை காப்பீட்டு நிறுவனங்கள், மற்றும் பெரு வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களை நிதி மேலாளர்களாக நியமித்தது இந்திய அரசு.[8]

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு

தொகு

முந்தைய ஓய்வூதிய திட்டத்தை விட 01-01-2004 முதல் செயல்பட்டு வரும் புதிய ஓய்வூதிய திட்டத்தால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பொதுத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கு பணி ஓய்விற்குப் பின் கிடைக்கும் ஓய்வூதியம் மிகக் குறைவாகவும், அல்லது சரியான அளவில் ஓய்வூதியம் கிடைக்கும் என்ற உறுதியற்ற தன்மை இருப்பதால், இப்புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு இந்திய முழுவதும் ஆசிரியர்கள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நடுவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. எனவே இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக்கோரியும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் நாடெங்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்கள் நடத்தினர்.[9]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் http://www.agae.tn.nic.in/gpf14_cps_faq.pdf
  2. http://www.scribd.com/doc/33200541/Contributory-Pension
  3. மைய அரசின் புதிய ஓய்வூதிய திட்டம் http://vigyanlekha.gov.in/Admin/Attachments/NPS-Forms/Defined%20Contributory%20PensioN%20Scheme%20-%20Streamlining%20of%20Procedure.pdf பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
  4. http://www.valueresearchonline.com/story/h2_storyView.asp?str=18794
  5. http://www.pfrda.org.in/
  6. புதிய ஓய்வூதிய வரைவு நகல் மற்றும் நிதி மேலாண்மை விரிவாக்க ஆணையம் நிறுவ வரைவு நகல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதுhttp://indiacode.nic.in/acts-in-pdf/232013.pdf
  7. Central Record Keeping Agency (CRA) CRA
  8. ஓய்வூதிய திட்ட நிதி மேலாளர்கள் http://pfrda.org.in/indexmain.asp?linkid=183
  9. புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக்கோரி நாடெங்கும் எதிர்ப்புக் குரல் http://www.youtube.com/watch?v=jgTmRJTbERk

வெளி இணைப்புகள்

தொகு