தேசிய தகுதித் தேர்வு
தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Test-NET) இந்தியாவிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் ஆவதற்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship-JRF) பெறுவதற்கானத் தகுதியையும் தீர்மானிப்பதற்காக தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது.
இளையர் ஆய்வ உதவித்தொகை விருதுத் தேர்வு, 1984 முதல் நடைபெற்று வந்தது. இந்திய அரசு, ஜூலை 22, 1988 தேதியிட்ட அறிவித்தலின் மூலம் விரிவுரையாளர் தகுதித் தேர்வு நடத்தும் பணியை பல்கலைக்கழக மானியக்குழுவிடம் (UGC) ஒப்படைக்கப்பட்டது. இதன் விளைவாக, விரிவுரையாளர் மற்றும் இளையர் ஆய்வுதவித் தொகை விருது இரண்டிற்கும் பொதுவாக தேசிய தகுதித் தேர்வு முதன்முதலாக டிசம்பர் 1989 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் இரண்டுமுறை சூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.
இதற்கு முன்புவரை இந்த பேராசிரியர்தகுதித்தேர்வை uயுஜிசி-யும், அதன்பிறகுசிபிஎஸ்இ-யும்நடத்திவந்தது. இந்நிலையில்,இந்தஆண்டுநெட்தேர்வைதேசியதேர்வுமுகமைமுதல்முறையாகநடத்தஉள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- UGC NET Homepage
- UGC NET portal
- CSIR conducts NET for science stream
- UGC NET Applications Go Online
- UGC NET Books Reference
- UGC NET Pattern is Likely to Change பரணிடப்பட்டது 2013-10-28 at the வந்தவழி இயந்திரம்
- Kerala High Court Judgement on UGC NET June 2012
- Supreme Court upholds changed NET criteria பரணிடப்பட்டது 2014-07-04 at the வந்தவழி இயந்திரம்
- List of Fake Universities in India by UGC