தேசிய தோட்டக்கலை வாரியம்

தேசிய தோட்டக்கலை வாரியம் (National Horticulture Board) இந்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற ஓர் அமைப்பாகும்.[3] தோட்டக்கலையை ஊக்குவிப்பதற்கும், விவசாயிகளுக்கு உதவவும், இந்தியாவில் பயிர் உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரிக்கவும் இவ்வமைப்பு உதவுகிறது. [4]

தேசிய தோட்டக்கலை வாரியம்
The National Horticulture Board
राष्ट्रीय बागवानी बोर्ड
துறை மேலோட்டம்
அமைப்பு30 ஏப்ரல் 1984
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்குருகிராம், அரியானா
பணியாட்கள்23[1]
ஆண்டு நிதி643 மில்லியன் (US$8.1 மில்லியன்)[2]
அமைப்பு தலைமை
  • எசு.பி.முகர்ச்சி, தலைவர்
வலைத்தளம்www.nhb.gov.inn

தேசிய தோட்டக்கலை வாரியம் சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 ஆம் ஆண்டின் கீழ் ஒரு தன்னாட்சி சமூகமாக 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[5] இந்தியாவின் விவசாயத்தில் தோட்டக்கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும் தோட்டக்கலை மேம்பாடு, பரவலான உற்பத்தி, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் இவ்வமைப்பு நிறுவப்பட்டது.[6][7]

நோக்கம்

தொகு
  • உயர் தரமான தோட்டக்கலை நிலங்களை உருவாக்குவது
  • புதிய தோட்டக்கலைப் பொருட்களின் ஊக்குவிப்பு மற்றும் சந்தை வளர்ச்சி
  • தோட்டக்கலை உற்பத்தி மற்றும் பொருட்களின் நுகர்வை ஊக்குவித்தல்.
  • வேளாண் பயிற்சிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுரை வழங்குதல்

மேற்கோள்கள்

தொகு
  1. https://nhb.gov.in/NHB/ContactUsUploadedFile.aspx?enc=rbn2abWRSK+deb9ZPkQlhvpas5n41jvTfzjxUBGHdH8=
  2. https://www.nhb.gov.in/pdf/Final202122.pdf
  3. SnapView, Mint (2023-09-06). "Ailing plantation sector needs a holistic approach, not piecemeal fixes". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.
  4. Correspondent, Special (2022-04-09). "Anantapur, Kurnool, Kadapa selected for banana cluster development programme" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/anantapur-kurnool-kadapa-selected-for-banana-cluster-development-programme/article65306527.ece. 
  5. https://www.mofpi.gov.in/sites/default/files/NHB-English-for-Web.pdf
  6. Bureau, The Hindu (2023-01-11). "30,000 flowering plants to be displayed at Farm Fest-2023" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/puducherry/30000-flowering-plants-to-be-displayed-at-farm-fest-2023/article66364673.ece. 
  7. "Budget 2023: Horticulture industry hails Rs 2,200-cr fund for disease-free planting material". The Indian Express (in ஆங்கிலம்). 2023-02-01. பார்க்கப்பட்ட நாள் 2023-10-11.

புற இணைப்புகள்

தொகு