தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர்


தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) இந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு கலைக்கூடம் ஆகும். இந்த கலைக்கூடம் 2009 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இக் கலைக்கூடத்தில் நவீன இந்திய கலைப் பொருள்கள் மற்றும் ராஜா ரவி வர்மா, ஜாமினி ராய், அமிர்தா ஷெர்-கில், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏராளமான நவீன மற்றும் தற்கால கலைஞர்களின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு ஆடிட்டோரியம், ஒரு குறிப்பு நூலகம், ஒரு சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பல வசதிகள் இந்த அருங்காட்சியகத்தில் காணப்படுகின்றன. இந்த தேசிய நவீனக் கலைக்கூடமானது பெங்களூருவில் கலை நடவடிக்கைகளின் முக்கியமான மையமாகவும் பெங்களூருவில் ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாகவும் மாறி வரும் வகையில் அமைந்துள்ளது. இங்கு புகழ்பெற்ற பேச்சாளர்களைக் கொண்டு, கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன. பட்டறைகள் நடத்தப் படுகின்றன. மேலும் பல வழிகாட்டு நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த கலைக்கூடம் மேற்கொண்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. [1]

தேசிய நவீன கலைக்கூடம், பெங்களூர்
நிறுவப்பட்டதுபெப்ரவரி 18, 2009 (2009-02-18)
அமைவிடம்பெங்களூர்
வகைகலைக்கூடம்
உரிமையாளர்இந்திய அரசு
அருகிலுள்ள கார் நிறுத்துமிடம்கட்டணம் இல்லை
வலைத்தளம்http://ngmaindia.gov.in/ngma_bangaluru.asp

வரலாறுதொகு

 
தேசிய நவீன கலைக்கூட வளாகம்

தேசிய நவீன கலைக்கூடத்தின் மூன்றாவது தளம் 2006 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. நீண்டகால வளர்ச்சி மற்றும் சர்ச்சையைத் தொடர்ந்து இது செயல்பாட்டிற்கு வந்தது. 100 ஆண்டு கால, பரந்த இடத்தில் அமைந்துள்ள மாணிக்கவேலு மாளிகை ஒரு காலத்தில் மைசூரின் யுவராஜாவாக இருந்த விலம் மாணிக்கவேலு முதலியார் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. முதலியர் பெரிய அளவிலான பிரபுத்துவ குடும்பத்தில் பிறக்கவில்லை. இருந்தபோதிலும் அவர் அத்தகைய குடும்பத்தோடு திருமண உணவு வைத்துக் கொண்டார். பல மாங்கனீசு மற்றும் குரோம் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்த அவர் நாளடைவில் வெற்றிகரமான வணிக உரிமையாளர் என்ற தகுதியைப் பெற்றார். தேசிய நவீன கலைக்கூடத்தின் காப்பகங்களில் உள்ள ஆவணங்களின்படி, இந்த கட்டிடம் முதலியாரால் தனது வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் வாங்கப்பட்டது. முதலியர் மற்றும் அவரது குடும்பத்தினர் சில ஆண்டுகளாக இந்த மாளிகையில் வசித்து வந்தனர் என்பது கலைக்கூட ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், நிதி சிக்கல்கள் காரணமாக, அவர்கள் இந்த வீட்டினை ஏலத்திற்கு விடும் சூழலுக்கு உள்ளாயினர். தொடர்ந்து அந்த வீட்டை, தற்போது பிடிஏ என்றழைக்கப்படுகின்ற, நகர மேம்பாட்டு அறக்கட்டளை கையகப்படுத்தியது, பின்னர் 1960 களில் வீட்டுவசதி வாரியத்திற்கு மாற்றப்பட்டது. 2000 ஆம் ஆண்டில், கன்னட அமைச்சகம் மற்றும் பண்பாட்டு அமைச்சகம் இந்த மாளிகையை கலாச்சார அமைச்சகத்திற்கு மறு குத்தகைக்கு விட்டது. இந்த இடம் என்ஜிஎம்ஏ.வின் தெற்குப் பிரிவு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. [2] இதன் மறுசீரமைப்பு 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 18, 2009 ஆம் நான்று காப்பாட்சியர் சோபா நம்பீசன் பொறுப்பில் திறந்து வைக்கப்பட்டது.

கட்டிடம்தொகு

பெங்களூரில், ஜவஹர்லால் நேரு கோளரங்கத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில், அரண்மனை சாலையில் உள்ள மாணிக்கவேலு மாளிகையில் இது தற்போது செயல்பட்டு வருகிறது. 3.5 ஏக்கர் பெங்களூரு நகருக்குள் ஒரு பசுமைச் சோலையாக அமைந்துள்ள இடமாகும். [3]

சேகரிப்புகள்தொகு

தேசிய நவீன கலைக்கூடத்தில் தற்போது சுமார் 500 காட்சிப் பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கலைக்கூடம் ஒரு நடைபாதை, சிறிய அறைகள் மற்றும் இரண்டு தளங்களைக் கொண்ட பெரிய விசாலமான அரங்குகள். ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இங்குள்ள காட்சிப்பொருள்களை இதை 1 மணி நேரம் முதல் 2 மணி நேரத்திற்குள் பார்த்து வர முடியும். இங்கு ராஜா ரவி வர்மா, ஜாமினி ராய், அமிர்தா ஷெர்-கில், தாகூர் சகோதரர்கள் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏராளமான நவீன மற்றும் தற்கால கலைஞர்களின் ஓவியங்கள் உள்ளன. நவீன, பிந்தைய நவீன மற்றும் பாரம்பரிய கலைப் படைப்புகளின் தனித்துவமான கலவையை இங்கு காண முடியும். இது 18 ஆம் நூற்றாண்டு முதல் இன்று வரை காணப்படுகின்ற கலைப் பணிகளை இது வழங்குகிறது. எஸ்.தன்பால் மற்றும் கனய் குன்ஹிராமன் போன்றவர்களின் சிற்பங்களும் அர்பிதா சிங் மற்றும் அஞ்சோலி எலா மேனனின் கலைப்படைப்புகளும் இங்குள்ளவற்றில் குறிப்பிடத்தக்கனவாகும். [4] தேசிய மற்றும் சர்வதேச கண்காட்சிகள் இங்கு நடத்தப்படுகின்றன. [5]

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு