தேசிய நவீன கலைக்கூடம், மும்பை

தேசிய நவீன கலைக்கூடம் (National Gallery of Modern Art) இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் 1996 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பிரபலமான கலைஞர்கள், சிற்பிகள் மற்றும் வெவ்வேறு நாகரிகங்களைச் சேர்ந்த பல்வேறு காட்சிப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கலைக்கூடம் கொலாபாவில் உள்ள எம்.ஜி.சாலையில் ரீகல் சினிமாவுக்கு அருகிலுள்ள கோவாஸ்ஜி ஜஹாங்கிர் ஹாலில் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. [1]

தேசிய நவீன கலைக்கூடம், மும்பை
Map
நிறுவப்பட்டது1996 (1996)
அமைவிடம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

வரலாறு தொகு

தேசிய அளவிலான ஒரு கலைக்கூடத்தின் அமைப்பதற்கான யோசனை முதன்முதலில் 1949 ஆம் ஆண்டில் உருவானது. அந்த யோசனையானது பிரதமர் ஜவஹர் லால் நேரு மற்றும் மௌலானா ஆசாத் ஆகியோராலும், ஹுமாயூன் கபீர் போன்ற அதிகாரப்பொறுப்பில் இருந்தவர்களாலும் உள்ளூர் கலை சமூகத்தினராலும் மேம்படுத்தப்பட்டது. பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் நகரின் கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் முன்னிலையில் துணைத் ஜனாதிபதியான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் முறையாக 29 மார்ச் 1954 ஆம் நாளன்று திறந்து வைத்தார். லுடியென்ஸின் டெல்லியின் பிரதான மாளிகைகளில் ஒன்றான ஜெய்ப்பூர் ஹவுஸின் தெரிவு நிறுவனத்தின் உயர் நிலையிலான முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. ஜெய்ப்பூர் மகாராஜாவின் இல்லமாக சர் ஆர்தர் ப்ளோம்ஃபீல்ட் வடிவமைத்த, மத்திய குவிமாடம் கொண்ட பட்டாம்பூச்சி வடிவ கட்டிடம் 1936 இல் ஆம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும். சர் எட்வின் லுடியன்ஸ் காட்சிப்படுத்திய மத்திய அறுகோணத்தின் பாணியில் இது அமைந்தது. டெல்லியில் புதிய தலைநகருக்கு காட்சிப்படுத்திய மற்றும் வடிவமைத்தவர் ஹெர்பர்ட் பேக்கருடன் லுடியன்ஸ் இணைந்து புதிய வடிவம் தந்தனர். பிகானேர், ஹைதராபாத் போன்ற பிற சுதேசப் பிராந்தியளுக்காக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களின் பாணியைக் கொண்டே ஜெய்ப்பூர் ஹவுஸ் இந்தியா கேட்டினையும் கொண்டமைந்தது.

தேசிய நவீன கலைக்கூடத்தின் துவக்கமானது பல்வேறு சிற்பங்களின் கண்காட்சியைக் கொண்டு அமைந்திருந்தது. மிகப் புகழ் பெற்ற சிற்பிகளான டி.பி.ராய் சௌத்தரி, ராம்கிங்கர் பைஜ், சங்கோ சவுத்ரி, தன்ராஜ் பகத், சர்பாரி ராய் சௌத்தரி உள்ளிட்ட கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு தேசிய நவீன கலைக்கூடத்தின் முதல் காப்பாளரான ஹெர்மன் கோய்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்தார். ஒரு பிரபல ஜெர்மன் கலை வரலாற்றாசிரியரான கோய்ட்ஸ் முன்பு பரோடா அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு பொறுப்பேற்ற பெருமை உடையவர் ஆவார்.

தேசிய நவீன கலைக்கூடத்தின் காட்சிக்கூடங்கள் இந்திய அரசாங்கத்தின் பண்பாட்டுத் துறையின் துணை அலுவலகமாக நடத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது, மேலும் காட்சிக்கலை மற்றும் பிளாஸ்டிக் கலைத் துறையில் சுமார் 1857 ஆம் முதல் கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளில் கடந்து வரும் கலை வடிவங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சேகரிப்புகள் தொகு

தேசிய நவீன கலைக்கூடத்தில் பாப்லோ பிக்காசோவின் படைப்புகளின் தொகுப்பு மற்றும் எகிப்திய கலைப்பொருட்கள் மம்மிகள் மற்றும் சிலைகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. [2]

பார்வையாளர்கள் நேரம் தொகு

தேசிய நவீன கலைக்கூடம் அனைத்து தேசிய விடுமுறை நாள்கள் மற்றும் திங்கட்கிழமை தவிர பிற நாட்களில் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த கலைக்கூடத்தினை காலை 11.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பார்வையிடலாம். 2.00 மணி நேரத்திலிருந்து 3.00 மணி நேரத்திற்குள் இங்குள்ள காட்சிப்பொருள்களைக் காணமுடியும். 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். வயதிற்கான அடையாள அட்டை காண்பிக்கப்பட வேண்டும். இந்த கலைக்கூடத்தைப் பார்வையிட உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.20உம், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் ரூ.500உம் செலுத்த வேண்டும். [3]

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. National Gallery of Modern Art
  2. எல்லா தத்தா, தேசிய நவீன கலைக்கூடத்தின் பொக்கிஷங்கள், பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-88204-30-4 MAPIN (அகமதாபாத்)
  3. National gallery of Modern Art, Mumbai