தேசிய மக்கள் தொகை பதிவேடு
தேசிய மக்கள் தொகை பதிவேடு (National Population Register (NPR) என்பது இந்திய அரசின், உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கட்தொகை கணக்கிடும் தலைமை ஆணையாளர் (Registrar General and Census Commissioner of India), இந்தியாவில் குடியிருப்போர் தொடர்பான விவரங்களை பராமரிக்கும் பதிவேடாகும். [1].[2]தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி, ஒரு "வழக்கமான குடியிருப்பாளர்" என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறைந்தது ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த நபர், அல்லது அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ விரும்பும் நபரை குறிக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு "வழக்கமான குடியிருப்பாளரும்" இதில் பதிவு செய்வது கட்டாயமாகும். மக்கள்தொகை கணக்கெடுப்புடன் தொடர்புடைய இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடானது, தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான முதல் படியாகக் கருதப்படுகிறது.[3]
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், மக்கள் தொகைப் கணக்கெடுப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு யாதெனின், தேசிய மக்கள் தொகை பதிவேடு பராமரிக்கும் பணி இடைவிடாத தொடர்பணியாகும். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தேசிய மக்கட்தொகை பதிவேடும் பராமரிக்கப்பட்டது. பின்னர் 2015-ஆம் ஆண்டில் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி இந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் டிஜிட்டல் மயமாக்கல் ஆக்கப்பட்டது.
மக்கள் தொகை பதிவேட்டை பராமரிக்கும் நோக்கம்
தொகு- இந்திய அரசின் மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து பகுதி மக்களை சென்றடையச் செய்வது.
- இந்திய அரசின் திட்டமிடலை மேம்படுத்துவது.
- இந்தியக் குடிமகன்களை கண்டறிவதுடன், இந்தியர் அல்லாவதவர்களையும் கண்டறிவது.
- நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தவது.[4]
இந்தியக் குடியுரிமைச் சட்டம்
தொகுஇந்தியக் குடியுரிமை சட்டம் 1955, பிரிவு 14A-இன்படி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தேசிய மக்கட்தொகை பதிவேட்டில் தங்களைப் பற்றிய விவரங்களை கட்டாயமாக வழங்க வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்ப்பின் போது, இந்தியக் குடிமகன்களிடமிருந்து தேவையான விவரங்கள் பெற்று தேசிய மக்கட்தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்படும [5][6]
ஆதார் அடையாள அட்டை
தொகுதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் பதியாதவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்படாது. எனவே தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் தங்கள் பெயர் பதியாதவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மூலம், பெயர் விவரங்கள் பதிந்த பின், ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
2020 தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
தொகுஅசாம் மாநிலம் தவிர்த்து இந்தியா முழுவதும் ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 முடிய தேசிய மக்கள் தொகை பதிவேடு முழுமையாக பதியப்பட்டு வெளியிட இந்திய அரசு முடிவு செய்துள்ளது.[7][8]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-06. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.
- ↑ http://www.adiraixpress.in/2010/06/census.html#.VSkDpvmUcSM பரணிடப்பட்டது 2014-07-23 at the வந்தவழி இயந்திரம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு [Census] ஏன் ?
- ↑ தேசிய குடிமக்கள் பதிவேடு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.
- ↑ http://censusindia.gov.in/2011-Common/IntroductionToNpr.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-12-17.
- ↑ NPR: All you need to know about National Population Register that could pave way for pan-India NRC
- ↑ What is NPR: All you need to know about National Population Register
வெளி இணைப்புகள்
தொகு- குடியுரிமை திருத்தச் சட்டம் VS தேசிய குடிமக்கள் பதிவேடு... என்ன வேறுபாடு..?
- CAA, NPR and NRC: Confusion and connection explained
- Introduction to National Population Register - NPR
- [https://web.archive.org/web/20160305104254/http://www.viduthalai.in/home/viduthalai/science/4266--2011.html பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2011]]
- National Population Register
- [1]
- [2]
- Govt looks to integrate Aadhaar with National Population Register