தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Pharmaceutical Education and Research, Raebareli) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ரேபரேலி நகரத்தில் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது லக்னோவில் உள்ள போக்குவரத்து வளாகத்திலிருந்து இயங்கும் இந்திய பொது மருந்தியல் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாகும். இந்தியாவின் இரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு தேசிய மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒரு பகுதியாக இந்நிறுவனம் இயங்குகிறது. மருந்து அறிவியலில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களையும் நிறுவனம் வழங்குகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாகவும் வளர்ந்து வரும் இந்திய மருந்துத் தொழிலுக்கு மனித வள மேம்பாட்டில் முக்கிய பங்கும் வகிக்கிறது. மருந்து உற்பத்தியில் பரந்த அளவிலான திறன்களுடன் இந்தியாவின் அறிவியல் அடிப்படையிலான தொழில்களில் முன்னணியில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. [2] [3]
வகை | தேசிய முக்கிய நிறுவனங்களின் பட்டியல்கள் |
---|---|
உருவாக்கம் | 2008 |
பணிப்பாளர் | முனைவர் எசு.யே.எசு. புளோரா |
அமைவிடம் | , , இந்தியா 26°43′27″N 80°54′14″E / 26.7241682°N 80.9038014°E |
இணையதளம் | niperraebareli |
இந்த நிறுவனத்தில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.[4] லக்னோவிலுள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் இந்நிறுவனத்திற்கான வழிகாட்டி நிறுவனமாக செயல்படுகிறது. மருந்து அறிவியலில் முனைவர் பட்டப்படிப்பு, மருந்து விநியோகம், மருந்தியல் மற்றும் உயிரி-மருந்தியல் ஆகியவற்றில் நிறுவனத்திற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களுக்கு மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் பயிற்சி அளிக்கிறது.
வளாகம்
தொகுதேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் லக்னோவின் ஈரா லால் யாதவ் தொழினுட்ப மற்றும் மேலாண்மை நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள ஒரு போக்குவரத்து வளாகத்தில் இயங்குகிறது. [5]
ஒத்துழைப்புகள்
தொகு- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் கான்பூர்
- சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம்
- தில்லி மருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம்
- இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்கி
- இந்திய மருந்து மற்றும் மருந்து பொருட்கள் நிறுவனம், அரித்வார்
- நறுமணம் மற்றும் வாசனை மேம்பாட்டு நிறுவனம், கன்னோசி
- ஈரா பல்கலைக்கழகம்
- பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு