தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹாஜிப்பூர்

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹாஜிப்பூர் (National Institute of Pharmaceutical Education and Research, Hajipur) என்பது இந்தியாவின் பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் அமைந்துள்ள ஒரு பொது மருந்து கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஆகும். இந்நிறுவனம் 2007ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏழு தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் மருந்து அறிவியலில் முதுநிலை பட்டப்படிப்பை வழங்குகிறது. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற ஆய்வு நிறுவனங்களைப் போலவே, இதுவும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.[2][3]

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஹாஜிப்பூர்
வகைபொது
உருவாக்கம்2007 (2007)
பணிப்பாளர்வி. இரவிச்சந்திரன்[1]
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சுருக்கப் பெயர்NIPER ஹாஜிப்பூர்
இணையதளம்niperhajipur.ac.in

வரலாறு தொகு

இந்த நிறுவனம் நவம்பர் 2007 முதல் செயல்படத் தொடங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் இராம் விலாசு பாசுவான் மற்றும் இயக்குநர் மருத்துவர் பிரதீப் தாசு ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. அக்டோபர், 2018 வரை இந்த நிறுவனம் இராஜேந்திரா நினைவு மருத்துவ அறிவியல்-பாட்னாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டது. பிரதீப் தாசு தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்-ஹாஜிப்பூரின் திட்ட இயக்குநராக இருந்தார்.

அமைப்பு மற்றும் நிர்வாகம் தொகு

ஆளுகை தொகு

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி-கொல்கத்தாவின் இயக்குநர் மருத்துவர் வி. இரவிச்சந்திரன் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்-ஹாஜிப்பூரின் இயக்குநராகவும் (கூடுதல் பொறுப்பு) உள்ளார். ஜனவரி, 2020 முதல் இவர் இந்த கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்-ஹாஜிபூரில் தற்போது 9 கல்விப் புலங்கள் மற்றும் 4 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுடன் செயல்படுகிறது.

துறைகள் தொகு

மருந்தியல் மற்றும் நச்சுயியல் தொகு

இத்துறை 2018 முதல் செயல்படத் தொடங்கியது. விலங்குகள் இல்ல வசதியுடன் கூடிய ஆய்வகத்தை இத்துறை முழுமையாக உருவாக்கியுள்ளது.

உயிர்த்தொழில்நுட்பவியல் துறை தொகு

இத்துறை 2007 முதல் செயல்படத் தொடங்கியது. இது ஏற்கனவே 10 முனைவர் பட்ட வசதியினைக் கொண்ட துறையாகும்.

மருந்தியல் பயிற்சி துறை தொகு

இது 2007 முதல் செயல்படத் தொடங்கியது. மருத்துவ மற்றும் பயன்பாட்டு மருந்தகத்திற்கான முக்கிய மருத்துவமனைகளுடன் இத்துறை இணைந்துள்ளது.

கல்விப்புலம் தொகு

மாணவர் சேர்க்கை தொகு

ஒவ்வொரு ஆண்டும் சூன் மற்றும் சூலை மாதங்களில் தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எம். எசு (மருந்தியல்)/ முதுநிலை மருந்தியல் மற்றும் முனைவர் பட்ட சேர்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. தனிப்பட்ட நேர்காணல் மூலமும் விண்ணப்பதாரர்கள் தகுதி சோதிக்கப்பட்டு சேர்க்கை வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு அல்லது பட்டதாரி மருந்தியல் விருப்பத் தேர்வில் பொருத்தமான பாடப் பகுதியில் தகுதி பெற்றிருப்பவர்களுக்கு 4 பருவ 2 ஆண்டுகள் எம். எஸ். முதுநிலைப் பட்டப்படிப்பில் சேர அனுமதி வழங்கப்படுகிறது.

வசதிகள் தொகு

வளாகத்தினுள் தனித்தனி ஆடவர் மற்றும் பெண்கள் விடுதி வசதி உள்ளது. தேவையின் அடிப்படையில் வளாகத்திற்கு வெளியே வாடகை விடுதி வசதியும் உள்ளது. அனைத்து விடுதிகளிலும் 24 மணி நேர மின்னாக்கி வசதியுடன் கூடிய பாதுகாவலர்கள் உள்ளனர். போக்குவரத்து மற்றும் இணைய வசதி நாள் முழுவதும் கிடைக்கும். உணவகம் மாணவர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "Welcome to NIPER, Hajipur". www.niperhajipur.ac.in. Archived from the original on 25 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 October 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. The Hindu : Education Plus Bangalore : NIPER sets the benchmark
  3. All-India level rank in NIPER for SC boy - The Hindu

இதனையும் காண்க தொகு