தேசிய வறுத்த கோழி நாள்

தேசிய வறுத்த கோழி நாள் (National Fried Chicken Day) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்டுதோறும் சூலை 6ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் எப்படி உருவானது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.[1][2]

வறுத்த கோழி

தேசிய வறுத்த கோழி நாளினைக் கொண்டாட, வறுத்த கோழிக்கறி பல்வேறு முறைகளில் தயாரிக்கப்பட்டு, உண்ணப்படுகிறது.[3][4][5][6]

சர்ச்'சு சிக்கன் மற்றும் கே. எப். சி. போன்ற சில வறுத்த கோழி உணவகங்களும், கிராண்டிசு போன்ற பிற தொடர் வணிக உணவகங்களும் தேசிய வறுத்த கோழி நாளில் இந்நாள் குறித்த விளம்பரங்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்கின்றன.[7][8][9]

ஆத்திரேலியாவில்

தொகு

2018ஆம் ஆண்டில் கே. எப். சி. இன் ஆத்திரேலிய நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் இந்நாளைக் கொண்டாடும் வகையில் வருடம் முழுவதும் இலவச வறுத்த கோழியை வெல்லும் வாய்ப்பை வழங்கியது.[10] இப்போட்டியில் பங்கேற்பவர் பரிசுக்குத் தகுதியானவர் என்பதற்கான காரணங்களைக் கூறி சமூக ஊடக இடுகைகளை உருவாக்குவதன் மூலம் போட்டியில் பங்கேற்கலாம் என அறிவித்தது.[11] இப்போட்டியில் 19 வயது இளைஞன் ஒருவன், தனது தோழியுடன் சேர்ந்து, தனது காலில் கே. எப். சி. நிறுவன அடையாளச் சின்னத்தினை பச்சை குத்திக்கொண்டதன் மூலம் வெற்றி பெற்றார்.[12] இந்த நாள் பாரம்பரியமாகச் சூலை 7 அன்று ஆத்திரேலியாவில் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_வறுத்த_கோழி_நாள்&oldid=3713023" இலிருந்து மீள்விக்கப்பட்டது