தேசு வானூர்தி நிலையம்

தேசு வானூர்தி நிலையம் (Tezu Airport)(ஐஏடிஏ: TEIஐசிஏஓ: VETJ) இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், தேசுவில் அமைந்துள்ளது. இதனை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) இயக்குகிறது. இங்கு ஏடிஆர் 72 வகை விமானங்கள்[1] இரவு நேரத்திலும் தரையிறங்கும் வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.[2] மேம்படுத்தப்பட்ட விமான நிலையத்தை 9 பிப்ரவரி 2019 அன்று பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.[3]

தேசு வானூர்தி நிலையம்
Tezu Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
அமைவிடம்தேசு
உயரம் AMSL769 ft / 234 m
ஆள்கூறுகள்27°56′32″N 96°08′02″E / 27.9422°N 96.1339°E / 27.9422; 96.1339
நிலப்படம்
TEI is located in அருணாசலப் பிரதேசம்
TEI
TEI
TEI is located in இந்தியா
TEI
TEI
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
04/22 4,921 1,500 காண்கிரிட்

வரலாறு

தொகு

இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தின் "நோ-ஃப்ரில்ஸ் மாதிரியினை" செயல்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட ஐந்து வானூர்தி நிலையங்களுள் தேசு ஒன்றாகும். இது, விமான நிலையத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்கும். இருப்பினும் எந்த வகையிலும் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் சேவை வழங்கப்படும். குறைந்த செலவில் செயல்படுவதை உறுதிசெய்யும் நோக்கில், விமான நிலையத்தில் கொணரி பட்டைகள், வான்பாலம் இல்லை மற்றும் புறப்படும் பயணிகளுக்கான பாதுகாப்புப் பகுதி மட்டுமே குளிரூட்டப்பட்டதாக இருக்கக்கூடும்.[4]

தற்போதைய நிலை

தொகு
  • விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு ₹79 கோடி, 2009-10 காலத்தில் அங்கீகரிக்கப்பட்டது.[5]
  • ஓடுபாதையை 1500 மீட்டராக நீட்டித்தல், முனையக் கட்டிடம் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தின் கட்டுமானம் 2014க்குள் முடிக்கப்பட இருந்தது.[1] இருப்பினும், உள்ளூர் வாசிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டம் தாமதங்களை எதிர்கொண்டது மற்றும் காலக்கெடு தவறவிட்டது.[6]
  • ஓடுபாதையின் கட்டுமானப் பணிகள் மற்றும் எல்லைச் சுவர்கள், வாகன நிறுத்துமிடம் மற்றும் வடிகால் அமைப்பு போன்ற பணிகள் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்தன.[7]
  • சோதனை விமானம் ஒன்று 22 செப்டம்பர் 2017 அன்று ஓடுபாதையில் தரையிறங்கியது.[8]
  • மேம்படுத்தப்பட்ட விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி 9 பிப்ரவரி 2019 அன்று திறந்து வைத்தார்.[3]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Construction work gained momentum for Tezu airport in Arunachal". தி இந்து. 3 January 2014. http://www.thehindu.com/news/national/other-states/construction-work-gained-momentum-for-tezu-airport-in-arunachal/article5534189.ece. 
  2. "By air or road, Tezu is now a vantage point". தி இந்து. 4 March 2017. http://www.thehindu.com/news/national/by-air-or-road-tezu-is-now-a-vantage-point/article17409539.ece. 
  3. 3.0 3.1 "Modi opens Tezu Airport, lays stone for Greenfield Airport". The Sentinel. 10 February 2019. https://www.sentinelassam.com/news/modi-opens-tezu-airport-lays-stone-for-greenfield-airport/. 
  4. "Govt clears five budget airports to improve regional connectivity". Live Mint. 9 September 2014. http://www.livemint.com/Companies/5vySwgvpU4zKViXriL11RM/Govt-clears-five-budget-airports-to-improve-regional-connect.html. 
  5. "Report to the People 2009-10". Press Information Bureau. 2 June 2010. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=62260. 
  6. "Five towns that are being added to India’s airport map". Live Mint. 16 July 2015. http://www.livemint.com/Politics/JR9RGL2qeHmwAEz5ZvHgJO/Five-towns-that-are-being-added-to-Indias-airport-map.html. 
  7. "Air Connectivity Soon in Tezu". NorthEast Today. 27 November 2017 இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201034233/https://www.northeasttoday.in/air-connectivity-soon-in-tezu/. 
  8. "Test flight conducted in Tezu Airport". The Arunachal Times. 23 September 2017. https://arunachaltimes.in/index.php/2017/09/23/test-flight-conducted-in-tezu-airport/. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசு_வானூர்தி_நிலையம்&oldid=3315285" இலிருந்து மீள்விக்கப்பட்டது