தேஜேந்திர மசூம்தார்

இசை கலைஞனர்

பண்டிட் தேஜேந்திர நாராயண் மசூம்தார் (ejendra Narayan Majumdar ) (பிறப்பு 17 மே 1961) ஒரு இந்தியாவைச் சேர்ந்த சரோத் கலைஞராவார். இவர் பகதூர் கானின் மாணவர்.

தேஜேந்திர மசூம்தார்
தேஜேந்திர மசூம்தார், 2014
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்தேஜேந்திர நாராயண் மசூம்தார்
பிறப்பு17 மே 1961 (1961-05-17) (அகவை 62)
இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை
இசைக்கருவி(கள்)சரோத்
இணைந்த செயற்பாடுகள்பகதூர் கான்], அலி அக்பர் கான்

பயிற்சி தொகு

இவர் தனது தாத்தா பிபூதி ரஞ்சன் மசூம்தரின் கீழ் மாண்டலின் மூலம் தனது இசை பயிற்சியைத் தொடங்கினார். அமரேசு சௌத்ரி மற்றும் அனில் பாலித் ஆகியோரின் கீழ் குரல் மற்றும் கைம்முரசு இணை பயிற்சியையும் பெற்றார். [1] பின்னர் பகதூர் கானின் கீழ் 18 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர் அஜய் சின்கா ராய் மற்றும் அலி அக்பர் கான் ஆகியோரின் கீழ் தொடர்ந்து பயிற்சி பெற்றார்.

 
சியாட்டில் பகுதி இராகமாலா தொடரின் ஒரு பகுதியாக வாஷிங்டனின் பெல்லுவே, ஈஸ்ட்ஷோர் யூனிடேரியன் தேவாலயத்தின், ஸ்பிரிங் அரங்கில் நடந்த ஒரு இசைக் கச்சேரியில் தேஜேந்திர மசூம்தார்

இணை தொகு

இவர் சுஜாத் கானுடன் இணைந்து பாடியுள்ளார். குறிப்பாக சாருகேசி இராகத்தை பாடுவது குறிப்பிடத்தக்கது. [2]

இசை இயக்கம் தொகு

அர்ச்சுன் சக்ரவர்த்தி இயக்கிய டோலிலைட்ஸ் என்ற பெங்காலி திரைப்படத்திற்கு,[3] 2010 ஆம் ஆண்டில் வெளியான மற்றொரு வங்காள திரைப்படமான ஹனங்கால் படத்திற்கும் இசையமைத்துள்ளார். [4]

விருதுகள் தொகு

1981 ஆம் ஆண்டில் அனைத்திந்திய வானொலி நடத்திய இசை போட்டியில் முதலிடம் பிடித்த இவருக்கு குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கமும் பண்டிட் த. வி. பலூசுகர் விருதும் வழங்கப்பட்டது.[5]

சொந்த வாழ்க்கை தொகு

இவர் மானசி என்பவரை மணந்தார். இவர்களுக்கு இந்திரயுத் என்ற ஒரு மகன் இருக்கிறான். [6]

குறிப்புகள் தொகு

  1. "ITC Sangeet Sammelan — Hyderabad, 2006". ITC Sangeet Research Academy. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
  2. Raja, Deepak (18 September 2002). "Shujaat Khan – "Most duets are a farce"". Deepak Raja's world of Hindustani Music (Blog). பார்க்கப்பட்ட நாள் 2009-09-04.
  3. Das, Mohua (3 March 2008). "Filmi froth". Calcutta, India. பார்க்கப்பட்ட நாள் 2009-06-16.
  4. Chatterji, Shoma A. "Hanankaal 2010 Bengali Film by Saibal Mitra First Look". Calcutta Tube (Blog). பார்க்கப்பட்ட நாள் 2010-02-02.
  5. "ITC Sangeet Sammelan — Hyderabad, 2006". ITC Sangeet Research Academy. Archived from the original on 2006-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-09-02.
  6. "Rashid's latest crush". The Times of India. 21 March 2003. http://timesofindia.indiatimes.com/calcutta-times/rashids-latest-crush/articleshow/40912606.cms. பார்த்த நாள்: 2009-06-22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜேந்திர_மசூம்தார்&oldid=3559540" இலிருந்து மீள்விக்கப்பட்டது