சாருகேசி கருநாடக இசையின் 26ஆவது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் தரங்கிணி.[1][2]

இலக்கணம்

தொகு
 
சாருகேசி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி231 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம13 ரி2
  • பாண என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு

தொகு
  • சர்வஸ்வர கமக வரிக இராகம்.
  • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றது.
  • கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
  • இதன் பூர்வாங்கம் சங்கராபரணத்தைப் போன்றும், உத்தராங்கம் தோடியைப் போன்றும் இருப்பது கவனிக்கத்தக்கது.
  • மூர்ச்சனாகாரக மேளம். இதன் மத்திம, பஞ்சம, நிஷாத சுரங்கள் கிரக பேதத்தின் வழியக முறையே கௌரிமனோகரி (23), நாடகப்பிரியா (10), வாசஸ்பதி (64) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
  • இதன் எண்ணைத் திருப்பிப் போட்டால் (62), இதன் பிரதி மத்திம மேளமாகிய ரிஷப்பிரியா கிடைக்கும்.

ஜன்ய இராகங்கள்

தொகு

சாருகேசியின் ஜன்ய இராகங்கள் இவை.

திரையிசைப் பாடல்கள்

தொகு

சாருகேசி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

மேற்கோள்கள்

தொகு
  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Devotional song on Charukesi by P. Unni Krishnan
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாருகேசி&oldid=4113950" இலிருந்து மீள்விக்கப்பட்டது