கௌரிமனோகரி

கௌரிமனோகரி கருநாடக இசையின் 23வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு கௌரீ வேளாவளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

தொகு
 
கௌரிமனோகரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 5வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

தொகு
  • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கின்றது.
  • கருணைச்சுவை நிரம்பியது. எப்பொழுதும் பாடலாம்.
  • இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் தர்மவதி (59வது மேளகர்த்தா) ஆகும்.
  • மூர்ச்சனாகாரக மேளம். இதன் ரிஷப, மத்திம, பஞ்சம சுரங்கள் கிரக பேதத்தின் வழியக முறையே நாடகப்பிரியா (10), வாசஸ்பதி (64), சாருகேசி (26) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
  • ஐரோப்பிய இசையில் உள்ள Melodic Minor Scale என்ற சுரக்கோர்வையின் ஆரோகணம் கௌரிமனோகரி மேளத்தை ஒத்துள்ளது. (அதன் அவரோகணம் 20 வது மேளமான நடபைரவியை ஒத்துள்ளது.)

உருப்படிகள்

தொகு

ஜன்ய இராகங்கள்

தொகு

கௌரிமனோகரியின் ஜன்ய இராகங்கள்:

திரையிசைப் பாடல்கள்

தொகு
  • பாட்டும் நானே பாவமும் நானே - திருவிளையாடல் (1965)
  • மலரே குறிஞ்சி மலரே – Dr.சிவா (1975)
  • கௌரி மனோகரியை கண்டேன் - மழலை பட்டாளம் (1980)
  • பொன்வானம் பன்னீர் தூவுது - இன்று நீ நாளை நான் (1983)
  • சோலை பூவில் மாலை தென்றல் - வெள்ளை ரோஜா (1983)
  • தேன் பூவே பூவே வா - அன்புள்ள ரஜினிகாந்த் (1984)
  • பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே (1998)

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரிமனோகரி&oldid=2626886" இலிருந்து மீள்விக்கப்பட்டது