தேத்திசுப் பெருங்கடல்

தேத்திசுப் பெருங்கடல் (Tethys Ocean, கிரேக்கம்: Τηθύς Tēthús), தேத்திசுக் கடல் அல்லது நியோ-தேத்திசு (Neo-Tethys) என்பது மைய ஊழியின் பெரும்பகுதியின் போதும், தொடக்கக்கால புத்துயிர் ஊழியின் போதும் வரலாற்றுக்கு முந்தைய கடலாக இருந்தது. இது இன்றைய இந்தியப் பெருங்கடல், நடுநிலக் கடல், யூரேசிய உள்நாட்டுக் கடல் படுகைகளுக்கு (முக்கியமாக இன்றைய கருங்கடல், காசுப்பியன் கடலால் குறிப்பிடப்படுகிறது) முன்னோடியாக இருந்தது.[1][2]

தேத்திசுப் பெருங்கடலின் முதல் கட்டம்: (முதலாவது) தேத்திசுக் கடல் பாங்கேயாவை லோரேசியா, கோண்டுவானா என இரண்டு மீப்பெரும் கண்டங்களாகப் பிரிக்கத் தொடங்குகிறது.

தொடக்கக்கால மைய ஊழிக் காலத்தில், பாங்கேயா உடைந்ததால், தேத்திசுப் பெருங்கடல் பண்டைய கண்டங்களான கோண்டுவானா, லோரேசியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள கடல் என வரையறுக்கப்பட்டது. கிரீத்தேசியக் காலத்தில் இந்திய, அத்திலாந்திக்குப் பெருங்கடல்கள் திறக்கப்பட்டு, அதே காலகட்டத்தில் இந்தக் கண்டங்கள் உடைந்த பிறகு, இது ஆப்பிரிக்கா, யூரேசியா, இந்தியா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களின் எல்லையாக உள்ள கடல் என வரையறுக்கப்பட்டது. தொடக்க-மத்திய புத்துயிர் ஊழிக் காலத்தில், இந்திய, ஆப்பிரிக்க, ஆத்திரேலிய, அரேபிய புவித்தட்டுகள் வடக்கே நகர்ந்து யூரேசியப் புவித்தட்டுடன் மோதியது, இது கடலுக்கு புதிய எல்லைகளை உருவாக்கிய, இந்திய, நடுநிலக்கடல்ப் படுகைகளுக்கு இடையேயான நீரோட்டங்களின் ஓட்டத்திற்கு நிலத் தடையாக இருந்தது. ஆல்பைட் பெல்ட்டின் ஓரோஜெனிகள் ஆல்ப்சு, இமயமலை, சகுரோசு, காக்கசஸ் மலைத்தொடர் உட்பட்ட ஆல்பைட் திட்டின் மலை பிறப்புகள் போன்ற புவியியல் நிகழ்வுகள் அனைத்தும், அண்டார்ட்டிக்குப் பனிப்பாறையிலிருந்து கடல் மட்ட உயர்வு வீழ்ச்சியுடன், தேத்திசுப் பெருங்கடலை இந்தியப் பெருங்கடல், நடுநிலக்கடல் ,பராதேத்திசு எனத் துண்டாக்கியது.[1][2]

இதற்கு முன் பேலியோ-தேத்திசுப் பெருங்கடல் இருந்தது, இது கேம்பிரியக் காலம், தொடக்க திரியாசிக்குக் காலம் ஆகியவற்றிற்கிடையே நீடித்தது, அதே வேளை நியோ-தேத்திசு பிற்பகுதியில் திரையாசிக் காலத்தில் உருவாகி, ஒலிகோசீன்-மியோசீன் எல்லை வரை (சுமார் 24-21 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) வரை நீடித்து, முற்றிலும் மூடப்பட்டது.[1][3] ஒலிகோசீன் காலத்தில் (34 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) பரதேதிசு என்று அழைக்கப்படும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, பிளியோசீன் (ஏறத்தாழ 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) வரை நீடித்து, பெரும்பாலும் வற்றிப் போனது.[4] ஐரோப்பா, மேற்கு ஆசியா ஆகியவற்றின் இன்றைய உள்நாட்டுக் கடல்களான கருங்கடல், காஸ்பியன் கடல் ஆகியவை பரதேத்திசுக் கடலின் எச்சங்களாகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Tethys Sea | Definition, Location, & Facts | Britannica". www.britannica.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.
  2. 2.0 2.1 Bialik, Or M.; Frank, Martin; Betzler, Christian; Zammit, Ray; Waldmann, Nicolas D. (2019-06-20). "Two-step closure of the Miocene Indian Ocean Gateway to the Mediterranean" (in en). Scientific Reports 9 (1): 8842. doi:10.1038/s41598-019-45308-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:31222018. Bibcode: 2019NatSR...9.8842B. 
  3. Torfstein, Adi; Steinberg, Josh (2020-08-14). "The Oligo–Miocene closure of the Tethys Ocean and evolution of the proto-Mediterranean Sea" (in en). Scientific Reports 10 (1): 13817. doi:10.1038/s41598-020-70652-4. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:32796882. 
  4. Stampfli, Gérard. "155 Ma - Late Oxfordian (an. M25)" (PDF). University of Lausanne. Archived from the original (PDF) on 2012-01-13.

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேத்திசுப்_பெருங்கடல்&oldid=4177786" இலிருந்து மீள்விக்கப்பட்டது