தேனி முதன்மைக் கல்வி மாவட்டம்
தேனி முதன்மைக் கல்வி மாவட்டம் என்பது வருவாய்த்துறையின் கீழான தேனி மாவட்டத்திலுள்ள பள்ளிக் கல்விக்கான மாவட்டமாகும். இந்த முதன்மைக் கல்வி மாவட்டத்தில் பெரியகுளம் கல்வி மாவட்டம் மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன. 2018 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் முன்பிருந்த இரண்டு கல்வி மாவட்டங்களுடன் தேனி கல்வி மாவட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. [1] தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்திற்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தலைமை அதிகாரியாகச் செயல்படுகிறார்.