பெரியகுளம் கல்வி மாவட்டம்

பெரியகுளம் கல்வி மாவட்டம் என்பது தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் உள்ள இரு கல்வி மாவட்டங்களில் ஒன்றாகும். தேனி மாவட்டத்தின் பெரியகுளம் வருவாய்க் கோட்டத்தின் கீழுள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி மற்றும் தேனி வட்டங்களிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இக்கல்வி மாவட்டத்தின் எல்லைகளுக்குட்பட்டதாக இருந்து வந்தன.

2018 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் முன்பிருந்த இரண்டு கல்வி மாவட்டங்களுடன் தேனி கல்வி மாவட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டதால், இக்கல்வி மாவட்டத்திலிருந்த தேனி வட்டாரம், மயிலாடும்பாறை வட்டாரம் ஆகியவை தேனி கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. தற்போது பெரியகுளம் வட்டாரம், ஆண்டிபட்டி வட்டாரங்களிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் இக்கல்வி மாவட்டத்தின் எல்லைகளாக மாற்றம் பெற்றன. [1]

இக்கல்வி மாவட்டத்திற்கு மாவட்டக் கல்வி அதிகாரி தலைமை அதிகாரியாக இருக்கிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. தேனியில் கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு (தினமலர் நாளிதழ் செய்தி)