தேனீ வளர்ப்பு இல்லம்

தேனீ வளர்ப்பு இல்லம் (Casa de la Apicultura) என்பது எசுப்பானியாவின் ஆதூரியாவில், போல் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகம். இது தேனீ வளர்ப்பு தொடர்பான சேகரிப்பின் இல்லமாகும். தேனீ வளர்ப்பு ஆதூரியாவின் பாரம்பரிய நடவடிக்கையாகும்.

இந்த அருங்காட்சியகம் 1911ஆம் ஆண்டில் கியூபாவின் அவானாவில் சொசைடாட் டி இன்ஸ்ட்ரூசியன் நேச்சுரல்ஸ் டெல் கான்செஜோ டி போல் என்பவரால் கட்டப்பட்ட முன்னாள் கிராமப்புற பள்ளியில் உள்ளது. இப்பள்ளியானது 1930களின் நடுப்பகுதியில் கட்டப்பட்டது. பின்னர் தேனீ அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகம் இரண்டு நோக்கங்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. ஒன்று தேனீ வளர்ப்பு கலாச்சார ஆவணப்படுத்துவது. மற்றொன்று இப்பிராந்தியத்தின் தேனீ வளர்ப்பவர்களுக்கான பயிற்சி மற்றும் தகவலைச் சேகரித்தலும் காட்சிப்படுத்தலும். இங்கு லோபசு எழுதிய லாசு அபேஜாசு, லா மியல் ஒய் லா செரா என் லா சொசைடாட் ட்ரடிஷனல் அஸ்டுரியானா ("தேனீக்கள், தேன் மற்றும் மெழுகு அசுதுரியன் பாரம்பரிய சமுதாயம்") புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட உரை மற்றும் புகைப்படங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Casa de la Apicultura". Ayuntamiento de Boal (in Spanish). பார்க்கப்பட்ட நாள் 2011-04-29.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

மேலும் படிக்க தொகு

  • López Alvarez, J. (1994). Las abejas, la miel y la cera en la sociedad tradicional asturiana. Oviedo: Real Instituto de Estudios Asturianos.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனீ_வளர்ப்பு_இல்லம்&oldid=3830258" இலிருந்து மீள்விக்கப்பட்டது