தேப்லா (ரொட்டி)

இந்திய உணவு

தேப்லா (ரொட்டி) ( குசராத்தி: થેપલા ) குசராத்தி உணவு வகைகளில் ஒரு மென்மையான இந்திய தட்டையான ரொட்டி வகை ஆகும் [1]

தயிர் மற்றும் ஊறுகாயுடன் தேப்லா.

இது பொதுவாக காலை உணவாக உண்ணப்படுகிறது. சிற்றுண்டியாகவும் (Snack) உண்ணலாம். [2] சாப்பாட்டுடன் துணை உணவாகவோ அல்லது பிற்பகலில் சிற்றுண்டியாகவோ பரிமாறலாம். கோதுமை மாவு, கடலை மாவு , மேத்தி ( வெந்தய கீரை) மற்றும் பிற மசாலாப் பொருட்களுடன் தேப்லாவைச் சமைக்கலாம். தயிர், சிவப்பு பூண்டு சட்னி மற்றும் சுண்டோ (இனிப்பு மாங்காய் ஊறுகாய்) ஆகியவற்றுடன் தேப்லாவை ருசிக்கலாம். [3]

வகைகள்

தொகு

பல்வேறு வகையான தேப்லாக்கள், வெவ்வேறு பொருட்களைப் பயன்படுத்தி சமைக்கப்படுகின்றன. பொதுவான தேப்லா வகைகளுள் வெந்தயக்கீரை (மேத்தி), [4] முள்ளங்கி (மூலி) [2] மற்றும் சுரைக்காய் ஆகியன அடங்கும். [5] பிசைந்த உருளைக்கிழங்கு, கலந்த காய்கறிகள் அல்லது பூண்டு ஆகியவற்றைக் கொண்டும் தேப்லா செய்யலாம். குசராத்திய பாரம்பரிய உணவான மேத்தி தேப்லா மிகவும் பிரபலமானதாகும். [6]

சப்பாத்திக்கும் தேப்லாவுக்கும் வித்தியாசம்

தொகு

சப்பாத்திக்குப் பிசையும் மாவு, முழு வெள்ளை மாவு (சன்னமான), எண்ணெய் / நெய்யில் உப்பு சேர்த்து, மாவை பெரும்பாலும் தண்ணீருடன் பிணைத்து தயாரிக்கப்படுகிறது. சப்பாத்தி என்பது அன்றாட உணவாகும். பொதுவாக எண்ணெய் அல்லது நெய் இல்லாமல் தவாவில் சுட்ட பின்னர், நேரடியாக தணலில் வாட்டுவதன் மூலம், சிறிது நெய் மேலே பரவுகிறது.

தேப்லா பெரும்பாலும் பல தானியங்களைச் அரைத்து சேர்த்த மாவில் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக முழு கோதுமை மாவுடன் கொண்டைக்கடலை மற்றும் தினை மாவு சேர்த்து தயாரிக்கப்படுகிறது. பயணத்திற்காக தயாரிக்கப்படும் போது, தேப்லாவிற்கான மாவில் தண்ணீருக்குப் பதிலாக பால் மற்றும் கூடுதல் நெய்/எண்ணெய் சேர்த்து கெட்டியாக திரட்டப்படுகிறது. இவ்வாறு தேப்லா செய்வதால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும்..

மேலும் பார்க்கவும்

தொகு
  • குஜராத்தி சமையல்
  • தெப்ரா

மேற்கோள்கள்

தொகு
  1. "Thepla Recipe: How to Make Thepla". recipes.timesofindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
  2. 2.0 2.1 "mooli thepla recipe, how to make mooli thepla recipe | radish thepla recipe". www.vegrecipesofindia.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-01."mooli thepla recipe, how to make mooli thepla recipe | radish thepla recipe". www.vegrecipesofindia.com. Retrieved 2018-05-01.
  3. How to make authentic Gujarati thepla:https://food.ndtv.com/food-drinks/indian-cooking-tips-how-to-make-authentic-gujarati-thepla-at-home-recipe-video-2103685
  4. "methi thepla recipe, how to make gujarati methi thepla recipe | methi recipes". www.vegrecipesofindia.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
  5. "lauki thepla recipe | dudhi na thepla recipe | gujarati lauki thepla recipe". www.vegrecipesofindia.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-05-01.
  6. Bored of roti, try methi thepla: https://indianexpress.com/article/lifestyle/food-wine/methi-thepla-recipe-if-you-are-bored-of-regular-roti-6384685/
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேப்லா_(ரொட்டி)&oldid=3772364" இலிருந்து மீள்விக்கப்பட்டது