தேரா பாபா நானக்
தேரா பாபா நானக் (Dera Baba Nanak) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கிழக்கே, இந்திய-பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த நகரம் ஆகும்.
மக்கள்தொகை பரம்பல்
தொகு11 வார்டுகள் கொண்ட தேரா பாபா நானக் நகராட்சியின், 2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 6,394 ஆகும். இந்நகரத்தில் இந்துக்கள் 55.81%, சீக்கியர்கள் 41.09%, இசுலாமியர்கள் 2.89% மற்றும் பிற சமயத்தவர்கள் 0.25% உள்ளனர். [1]
தேரே பாபா நானக் - கர்தார்பூர் இணைப்பு சாலைப் போக்குவரத்து திட்டம்
தொகுநவம்பர் 2019ல் குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, இந்தியாவின் தேரா பாபா நானக் நகரத்தையும், பாகிஸ்தான் நாட்டின் கர்தார்பூர் நகரத்தையும் இணைக்கும் 6.4 கிமீ நீளம் கொண்ட பன்னாட்டு சாலைப்போக்குவரத்து அமைக்க இந்திய - பாகிஸ்தான் அரசுகள் முடிவெடுத்துள்ளது.[2][3]கர்தார்பூர், பாகிஸ்தான் - தேரா பாபா நானக் இணைப்புச் சாலையை 9 நவம்பர் 2019 அன்று, பாகிஸ்தான் பகுதியின் சாலையை பிரதமர் இம்ரான் கானும், இந்தியப் பகுதியின் கர்த்தார்பூர் சாலையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் திறந்து வைத்தனர்.[4]
இதனையும் காண்க
தொகுGallery
தொகு-
Garments Of Guru Nanak preserved at Gurudwara Sri Chola Sahib
-
Gurudwara Sri Chola Sahib