கர்தார்பூர், இந்தியா
கர்தார்பூர் (Kartarpur) இந்தியாவின் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். ஜலந்தர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான ஜலந்தருக்கு 15 கிமீ தொலைவில் கர்த்தார்பூர் உள்ளது.
கர்தார்பூர், இந்தியா | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் கர்த்தார்பூர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 31°26′N 75°30′E / 31.44°N 75.5°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப், இந்தியா |
மாவட்டம் | ஜலந்தர் |
தோற்றுவித்தவர் | குருநானக் |
அரசு | |
• வகை | பேரூராட்சி |
ஏற்றம் | 228 m (748 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,662 |
மொழி | |
• அலுவல் மொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 144801 |
தொலைபேசி குறியிடு | 0181 |
வாகனப் பதிவு | PB 08 |
மக்கள்தொகை பரம்பல்
தொகு15 வார்டுகளும், 5,332 வீடுகளும் கொண்ட கர்த்தார்பூர் பேரூராட்சி, 2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 25,662 ஆகும். இதில் 13,368 ஆண்கள் ஆகவும்; பெண்கள் 12,294 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 2,684 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 847 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 83.94% ஆகவுள்ளது.
கர்த்தார்பூர் நகரத்தில் இந்துக்கள் 73.52%, சீக்கியர்கள் 23.46%, இசுலாமியர் 2.51% மற்றவர்கள் 0.51% ஆகவுள்ளனர்.[1]