தேவகோட்டை தமிழிசை மாநாடு (1941)

தேவகோட்டை தமிழிசை மாநாடு, என்பது தேவகோட்டையில் 1941ஆம் ஆண்டு நடந்த தமிழ் இசை மாநாடு ஆகும். இது இரண்டாவது தமிழிசை மாநாடு என்றும் அழைக்கப்படுகிறது.

1941இல் தேவகோட்டையில் நடந்த தமிழிசை மாநாடு புகைப்படம்.

தமிழிசை இயக்கம்

தொகு

சங்ககாலத்தில் தமிழிசை  சிறப்புற்று இருந்தது. பின்னர் பக்தி காலத்திலும் தேவாரங்கள், பிரபந்தங்கள் ஊடாக தமிழிசை சிறப்புற்று இருந்தது. ஆனால் கி.பி14ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு தெலுங்கு விஜயநகர ஆட்சிக்கு உட்பட்டது. இதன் காரணமாக தெலுங்கு மொழி இசையில் முக்கிய இடம் பிடிக்கத் தொடங்கியது. தமிழர் இசை மரபு தெலுங்கு இசையினுள் உள்வாங்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலும் இந்த நிலையே தொடர்ந்தது. இசையரங்குகளில் தெலுங்கு அல்லது பிற மொழிகளிலேயே பாடல்கள் பாடப்பட்டன.இறுதியில் மட்டுமே இரண்டொரு தமிழ்ப் பாடல்கள் 'துக்கடா' என்ற பெயரில் பாடப்பட்டுவந்தன.[1]

இந்தச் சூழ்நிலையில் தமிழ் இசையை வளர்ப்பதற்கு தோன்றியதே தமிழிசை இயக்கம்.

தமிழிசை மாநாடு

தொகு

முதல் தமிழிசை மாநாடு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் முன்னெடுப்பில் 1941ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடந்தது.[2] [3] இதை தொடர்ந்து அதே ஆண்டு  இரண்டாம் தமிழிசை மாநாடு டி.ஆர்.அருணாச்சலம், சின்ன அண்ணாமலை ஆகியோரின் முயற்சியில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் நிதி உதவியுடன் தேவகோட்டையில் நடந்தது.[3] பின்னர் அதே ஆண்டு காரைக்குடியிலும் நடந்தது.[2]

கலந்துகொண்ட கலைஞர்கள்

தொகு
  • நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
  • மதுரை மணி
  • திருச்சி சகோதரர்கள்
  • சித்தூர் சுப்பிரமணியப்பிள்ளை
  • மாரியப்ப சுவாமிகள்
  • வினைதீர்த்தான் செட்டியார்
  • சரஸ்வதிபாய் அம்மாள்
  • தியாகராஜ பாகவதர்
  • ம. ச. சுப்புலட்சுமி

மேற்கோள்கள்

தொகு
  1. பி. டி. செல்லத்துரை (2005). தென்னக இசையியல். p. 194.
  2. 2.0 2.1 D.V. பாலகிருஷ்ணன். எம்.கே.டி. பாகவதர். OLD MADRAS PRESS. p. 58.
  3. 3.0 3.1 சின்ன அண்ணாமலை (1978). சொன்னால் நம்பமாட்டீர்கள். அல்லயன்ஸ் பதிப்பகம். pp. 70 முதல் 81வரை.