தேவநாகரி

(தேவநாகிரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேவநாகரி (Devanagari) என்பது சமசுகிருதம், இந்தி, மராட்டி, காசுமிரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த பிராமியின் வாரிசாகக் கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கிழக்கு அரமேய மொழி அரிச்சுவடி போன்ற செமிட்டிக் எழுத்துக்களிலிருந்து உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி.மு 2600 ஆண்டுகள் வரையாவது பழமையான சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்ற அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தும் உண்டு. பிராமிக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எழுத்துக்களையும் ஏனைய பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன.[1][2][3]

தேவநாகரி
முன் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தேவநாகரி முறையில் எழுதப்பட்ட ரிக் வேத நூல்
எழுத்து முறை வகை
காலக்கட்டம்
~1200 கி.பி முதல் இன்றுவரை
திசைLeft-to-right Edit on Wikidata
பிராந்தியம்இந்தியா மற்றும் நேபாளம்
மொழிகள்பல் இந்தோ ஆரிய மொழிகள், இந்தி, மராத்தி, சாந்தாலி, சமசுகிருதம், காசுமிரி
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
தோற்றுவித்த முறைகள்
குசராத்தி
நெருக்கமான முறைகள்
கிழக்கு நாகரி
சீ.அ.நி 15924
சீ.அ.நி 15924Deva (315), ​Devanagari (Nagari)
ஒருங்குறி
ஒருங்குறி மாற்றுப்பெயர்
Devanagari
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

தேவநாகரி என்னும் சொல், கடவுள் என்பதைக் குறிக்கும் சமசுகிருதச் சொல்லான "தேவ" என்பதும், நகரம் என்பதைக் குறிக்கும் "நாகரி" என்பதும் சேர்ந்து உருவானது. இச் சொல், கடவுளின் நகரத்தின் எழுத்து என்ற பொருள்படும்.

தேவநாகரி இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றது. சமசுகிருதத்தில் சொற்கள், மேற்கோடு முறியாமல் இடைவெளியின்றி எழுதப்படுகின்றன. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. நவீன மொழிகளில் சொற்கள் தனித்தனியாக எழுதப்படுகின்றன. தேவநாகரியில் ஆங்கிலத்திலிருப்பது போல் பெரிய, சிறிய எழுத்து வேறுபாடுகள் கிடையாது.

சமசுகிருத எழுத்துக்கூட்டல் ஒலிப்பியல் முறை ஆனாலும் வரலாற்று மாற்றங்களினால் தேவநாகரியிலெழுதப்படும் நவீன மொழிகள் ஓரளவு மட்டுமே ஒலிப்பியல் முறைமையைக் கொண்டுள்ளது. அதாவது தேவநாகரியில் எழுதப்படும் சொற்கள் ஒரு வழியாக மட்டுமே உச்சரிக்கப்படமுடியுமாயினும், எல்லா உச்சரிப்புக்களையும் அச்சொட்டாக எழுத முடியாது. தேவநாகரி 34 மெய்யெழுத்துக்களையும் (வியஞ்சன்), 12 உயிரெழுத்துக்களையும் (இசுவர்) கொண்டுள்ளது.

பின்வரும் அட்டவணைகளிலுள்ள transliterations[தெளிவுபடுத்துக] பிரபல கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் முறையைப் பின்பற்றியுள்ளது. ITRANS குறியீடு தேவநாகரியை ஆங்கிலத்துக்கு மாற்றுவதற்கான ஒரு lossless transliteration முறையாகும். இது Usenet இல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ITRANS முறையில் தேவநாகரி என்னும் சொல் "devanaagarii" என எழுதப்படும்.

தேவநாகரியின் குறியீடுகள்

தொகு

தேவநாகரியின் எல்லா உயிர்க் குறிகளும் மெய்யெழுத்துக்களுக்கு மேல் அல்லது கீழ்ப் பகுதியில் அல்லது இடப்பக்கத்தில் சேர்க்கப்படுகின்றன. "இ" உயிர் மட்டும் மெய்யெழுத்துக்கு வலப்பக்கம் சேர்க்கப்படும். "தேவநாகரி உயிரெழுத்துக்கள்" அட்டவணையில் "எழுத்துக்கள்" நிரலில் மெய்யெழுத்துச் சேர்க்கையின்றி வரும் உயிரெழுத்துக் குறியீடுகள் காட்டப்பட்டுள்ளன. "உயிர்க் குறியீடு" நிரல், உயிர் மெய்யெழுத்துக்களுடன் சேரும்போது பயன்படும் குறியீடுகளைக் கொண்டுள்ளது. "'ப' உடன் உயிர்" நிரலில் "ப்" மெய்யுடன் உயிரொலிகள் சேரும்போது வரும் குறியீடுகள் உதாரணமாகத் தரப்பட்டுள்ளன. "யுனிகோடு பெயர்" நிரல், உயிரொலிகளுக்கான யுனிகோடு specification இல் காணப்படும் பெயர்களைக் காட்டுகின்றது. "IPA" நிரல் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி முறையில் தேவநாகரி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகளைத் தருகின்றது.

தேவநாகரி உயிரெழுத்துக்கள்
எழுத்து உயிர்க் குறியீடு [ப] உடன் உயிர் யுனிகோடு பெயர் IPA
(pa) A ə
पा (pā) AA ɑ
ि पि (pi) I ɪ
पी (pī) II i
पु (pu) U ʊ
पू (pū) UU u
पृ (pṛ) VOCALIC R ri
पॄ VOCALIC RR
पॢ VOCALIC L
पॣ VOCALIC LL
पॅ CANDRA E
पॆ SHORT E
पे (pe) E e
पै (pai) AI ɛ
पॉ CANDRA O
पॊ SHORT O
पो (po) O o
पौ (pau) AU ɔ
Other modifier symbols
Symbol Symbol with [p] Unicode name Function
प् VIRAMA Called halant; suppresses the inherent vowel.
पँ CANDRABINDU Nasalizes vowel
पं ANUSVARA Nasalizes vowel
पः VISARGA Adds voiceless breath after vowel
प़ NUKTA Used to indicate sounds borrowed from Persian (e.g., ph + nukta = f)
पऽ AVAGRAHA

When no vowel is written, 'a' is assumed. To specifically denote the absence of a vowel, a halant (also called virama) is used.

Devanagari consonants
Letter Unicode name Transliteration IPA
KA k k
KHA kh kh
GA g g
GHA gh gɦ
NGA ŋ
CA c
CHA ch h
JA j
JHA jh ɦ
NYA ñ ɲ
TTA ʈ / ɽ̊
TTHA ṭh ʈh / ɽ̊h
DDA ɖ / ɽ
DDHA ḍh ɖɦ / ɽɦ
NNA ɳ
TA t
THA th h
DA d
DHA dh ɦ
NA n
PA p p
PHA ph ph
BA b b
BHA bh bɦ
MA m m
YA y j
RA r ɾ
LA l l
LLA ɭ
VA v v
SHA ś ɕ
SSA ʂ
SA s s
HA h h

இவற்றுள், ळ இந்தியில் பயன்படுத்தப்படுவதில்லை. மொத்தமும் மராத்தியில் பயன்படுத்தப்படுகிறது.

தேவநாகரி எழுத்துக்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன:

Devanagari numerals
0 1 2 3 4
5 6 7 8 9

யுனிக்கோடில் தேவநாகரி

தொகு

தேவநாகரியின் யுனிக்கோடு எல்லை U+0900 .. U+097F.

    0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F
900  
910  
920  
930   ि
940  
950   क़ ख़ ग़ ज़ ड़ ढ़ फ़ य़
960  
970   ॿ

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devanagari stroke order
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Devanagari pronunciation
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
Wikibooks
விக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:

மேற்கோள்கள்

தொகு
  1. Taylor, Isaac (1883). History of the Alphabet: Aryan Alphabets, Part 2. Kegan Paul, Trench & Co. pp. 324, 333. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7661-5847-4. வார்ப்புரு:Omission In the Kutila this develops into a short horizontal bar, which, in the Devanagari, becomes a continuous horizontal line வார்ப்புரு:Omission three cardinal inscriptions of this epoch, namely, the Kutila or Bareli inscription of 992, the Chalukya or Kistna inscription of 945, and a Kawi inscription of 919 வார்ப்புரு:Omission the Kutila inscription is of great importance in Indian epigraphy, not only from its precise date, but from its offering a definite early form of the standard Indian alphabet, the Devanagari வார்ப்புரு:Omission
  2. Salomon, Richard (1998). Indian epigraphy: a guide to the study of inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan languages. South Asia research. Oxford: Oxford University Press. pp. 39–41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-509984-3.
  3. Himelfarb, Elizabeth J. "First Alphabet Found in Egypt", Archaeology 53, Issue 1 (January/February 2000): 21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவநாகரி&oldid=4170591" இலிருந்து மீள்விக்கப்பட்டது