தேவர் செயந்தி

தேவர் செயந்தி (தேவர் ஜெயந்தி) என்று ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தென்பகுதியில் தேவர் குலத்தவர்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது [1][2] இந்நாள் ஒரு பொதுவிடுமுறையாக இல்லாதிருப்பினும் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளும் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.[3][4][5][6]

2007ஆம் ஆண்டு தேவர் செயந்தி விழாவின்போது மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தல்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்ந்திருந்த அரசியல் கட்சியான அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு இந்நாளை தமிழ்நாட்டில் ஓர் பொது விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி வருகிறது.[7]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவர்_செயந்தி&oldid=3248128" இருந்து மீள்விக்கப்பட்டது