தேவர் முக்குளம் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தேவர் முக்குளம் ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேவர் முக்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஸ்ரீரங்கநாத பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:தேவர் முக்குளம், கிருஷ்ணகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீரங்கநாத பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:தைமாத தேர்த் திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலின் முகப்பில் பலிபீடமும், கருடத்தம்பமும் அமைந்துள்ளன. இதையடுத்து பெரியதான மகாமண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தை அடுத்து சிறிய அர்த்த மண்டபமும் அதையடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் பிரம்மாண்டமாக பள்ளிகொண்ட நிலையில் அரங்கநாதர் உள்ளார். அவரது வலக்கரமானது மடித்து தலையைத் தாங்கி முகத்தை உயர்த்தியவறு உள்ளது. அவரது கால் பக்கத்தில் பூதேவியும், ஸ்ரீதேவியும் இருக்கின்றனர்.[2] இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3] இக்கோயிலையொட்டி உள்ள மலையில் நின்ற கோலத்தில் வெங்கடேச பெருமாள் உள்ளார்.

பூசைகள் தொகு

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. புரட்டாசி மாதம் 4ம் சனி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி. தனுர்மாத பூசையும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் தேர்த் திருவிழா நடக்கிறது.

அமைவிடம் தொகு

கிருஷ்ணகிரி- தருமபுரி நெடுஞ்சாலையில் 19 கிலோமீட்டர் தொலைவில் சப்பாணிப்பட்டி அமைந்துள்ளது. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவர்முக்குளம் என்ற கிராமத்தில் இக்கோயில் உள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டிணத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. பக். 128-129. 
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

தேவர் முக்குளம் ஶ்ரீரங்கநாதர் கோயில்