தேவாஸ் இராச்சியம்

தேவாஸ் இராச்சியம் (Dewas State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தேவாஸ் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இராச்சியம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

தேவாஸ் இராச்சியம்
देवास रियासत
மராத்தியப் பேரரசு, சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1728–1948

Flag of தேவாஸ்

கொடி

Location of தேவாஸ்
Location of தேவாஸ்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா வரைபடத்தில் மூத்த தேவாஸ் இராச்சியம் மற்றும் இளைய தேவாஸ் இராச்சியங்கள்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1728
 •  இந்திய விடுதலை 1948
பரப்பு
 •  1901 1,160 km2 (448 sq mi)
Population
 •  1901 62,312 
மக்கள்தொகை அடர்த்தி 53.7 /km2  (139.1 /sq mi)
தற்காலத்தில் அங்கம் தேவாஸ் மாவட்டம், மத்தியப் பிரதேசம் , இந்தியா
இளைய தேவாஸ் இராச்சியம்
देवास रियासत
மராத்தியப் பேரரசு, சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1728–1948

Flag of தேவாஸ்

கொடி

Location of தேவாஸ்
Location of தேவாஸ்
தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா வரைபடத்தில் மூத்த தேவாஸ் இராச்சியம் மற்றும் இளைய தேவாஸ் இராச்சியங்கள்
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1728
 •  இந்திய விடுதலை 1948
பரப்பு
 •  1901 1,100 km2 (425 sq mi)
Population
 •  1901 54,904 
மக்கள்தொகை அடர்த்தி 49.9 /km2  (129.3 /sq mi)
தற்காலத்தில் அங்கம் தேவாஸ் மாவட்டம், மத்தியப் பிரதேசம் , இந்தியா

வரலாறு தொகு

1728-இல் மராத்தியப் பேரரசின் பவார் வம்சத்தினரால் மத்திய-மேற்கு இந்தியாவில் நிறுவப்பட்ட தேவாஸ் இராச்சியம், மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்தது. பின்னர் 1841-ஆம் ஆண்டில் இந்த இராச்சியம் மூத்த தேவாஸ் இராச்சியம் மற்றும் இளைய தேவாஸ் இராச்சியம் என இரண்டாகப் பிரிந்தது.[1] மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற தேவாஸ் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். [2]

இது பிரித்தானிய இந்தியாவின் மத்திய இந்திய முகமையின் கீழ் செயல்பட்டது. தேவாஸ் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 15 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி தெவாஸ் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் மத்திய பாரதத்துடன் இணக்கப்பட்டது. 1956-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தேவாஸ் இராச்சியம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தேவாஸ் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

இதனையும் காண்க தொகு

  1. Mayer, Adrian C. (1960). Caste and Kinship in Central India: A Village and Its Region: International library of sociology and social reconstruction. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780520017474. https://archive.org/details/castekinshipince00maye. பார்த்த நாள்: 8 September 2012. 
  2. Meyer, William Stevenson, Sir; Burn, Richard, Sir; Cotton, James Sutherland; Risley, Sir Herbert Hope. Imperial Gazetteer of India, v. 11. பக். 278. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V11_284.gif. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவாஸ்_இராச்சியம்&oldid=3373750" இலிருந்து மீள்விக்கப்பட்டது