தேவிந்தர் குமார் மன்யால்

தேவிந்தர் குமார் மன்யால் (Devinder Kumar Manyal)(பிறப்பு ஏப்ரல் 21,1969) சம்மு காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராம்கர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மேனாள் சுகாதார அமைச்சரும் ஆவார். சம்பா மாவட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட சம்பா சட்டமன்றத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மன்யால் 2024 அக்டோபரில் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

தேவிந்தர் குமார் மன்யால்
சட்டமன்ற உறுப்பினர்-இராம்கர்
தொகுதிஇராம்கர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
மேனாள் சுகதார அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பூனம் மன்யால்
பிள்ளைகள்2
உறவினர்
வீரேந்திர மன்யால் (சம்மு காசுமீர் நிர்வாகப் பணி)
வேலைஅரசியல்வாதி

இளமையும் கல்வியும்

தொகு

மன்யால் சம்மு காசுமீரின் சம்பா வட்டம் தியானி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் மேனாள் அரசியல்வாதியான மறைந்த சோம் நாத் மன்யாலின் மகன் ஆவார். இவர் ஒரு மருத்துவரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியரும் ஆவார். இவரது மனைவி அரசு சேவையில் மருத்துவர் ஆவார். இவர் தனது மருத்துவப் படிப்பை பீஜப்பூரில் உள்ள பி. எல். டி. இ. மருத்துவக் கல்லூரியில் முடித்தார். பின்னர், மகாராட்டிராவின் வர்தா ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் எலும்பியல் துறையில் பட்டயப்படிப்பினை முடித்தார்.[3]

அரசியல்

தொகு

2014 சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியைப் பிரதிநிதி சம்பா சட்டமன்றத் தொகுதியில் மான்யால் வெற்றி பெற்றார். இவர் 34,075 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் யாஷ் பால் குண்டலை 22,118 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5] பின்னர், மன்யால் 2024 சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் இராம்கர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 35,672 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசின் யாஷ் பால் குண்டலை 14,202 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Samba Lok Sabha Election 2024 Live: Get Samba Lok Sabha Election Results and Candidate List". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  2. "Jammu Kashmir Election 2023: Get Latest Updates of Constituency List in Jammu Kashmir Assembly Election 2023". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  3. "Devinder Kumar Manyal(Bharatiya Janata Party(BJP)):Constituency- SAMBA (SC)(SAMBA) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  4. Kumar, Nitin (2024-08-30). "Samba Assembly Elections 2024: Constituency profile, winners, margin, party-wise candidates". www.indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  5. "Jammu and Kashmir Assembly election winners list". India Today. 2014-12-23. பார்க்கப்பட்ட நாள் 2024-09-22.
  6. "J&K Assembly Election Results 2024 - Ramgarh". https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0869.htm.