தேவை உலா (தேவையுலா) என்னும் நூல் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய நூல். 18-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தேவை என்பது ஊரின் பெயர். இது இராமேசுவரத்தைக் குறிக்கும். உலா என்னும் சிற்றிலக்கிய வகை நூல்களில் ஒன்று. [1]

தேவையுலா காப்புப் பாடல்

தொகு

வெண்பா யாப்பில் அமைந்துள்ள இந்த நூலின் காப்புச் செய்யுள் ஆதியுலா கொண்ட இராமேசன் மேல் இந்த நூல் பாடப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.[2]

தேவையுலா பாடலடிகள் எடுத்துக்காட்டு

தொகு
நீர்கொண்ட மேக நிறங்கொண்ட மால்கமலப்
போர்கொண்ட கண்மலராற் பூசித்தும்-சீர்கொண் 1
டுப மன் னியுவி னுபதேசம் பெற்றுஞ்
செபமன் னியபூசை செய்தும்-இபமென்ன 2
வந்து பிறந்த மதலையைச் சாம்பனென
இந்துகுலத் தொன்றுபெய ரிட்டழைத்தும்-வெந்துயரை 3
மேன்மாற்றும் வில்லோத கேச்சுர லிங்கத்தை

இதில் கூறப்பட்டுள்ள செய்தி

நீர் கொண்ட கருமேகம் போல் நிறம் கொண்டவன் திருமால். அவன் தன் தாமரை போன்ற கண்-மலரால் சிவபெருமானைப் பூசித்தான். [3] பூசித்த இடம் இந்த ஊர். உபமன்னியு என்பவன் இவ்வூர்ச் சிவபெருமானிடம் உபதேசம் பெற்றான். செபம் மன்னிய பூசை செய்தான். 'இபம்' என்னும் குழந்தையாக வந்து பிறந்த ஊர் இது. இவனைச் 'சாம்பன்' [4] என்பர். இவன் சந்திர குலத்தைச் சேஏர்ந்தவன். இந்த ஊர் கொடிய துன்பங்களை மாற்றும். இந்த ஊரிலுள்ள லிங்கத்தின் பெயர் வில்லோத கேச்சுர லிங்கம். [5]

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "தேவையுலா". Archived from the original on 2012-10-16. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
  2. ஆதியுலாக் கொண்ட வமலனிரா மேசன்மேற்
    சோதியுலாந் தேவையுலாச் சொல்லவே-காதலாம்
    தந்தத்தொந் தித்தந்தித் தாவென்றா டுஞ்சிவன்சேய்
    தந்தத்தொந் தித்தந்தித் தாள்.
  3. கண்ணை பிடுங்கிப் பூவாகப் போட்டுப் பூசித்தான் என்பது கதை
  4. இராமாயணத்தில் வரும் சாம்பவான்
  5. தனுசு என்னும் வில் போல் வளைந்துள்ள இடத்தில் அந்த வில் போல் வளைந்து வரும் அலை மோதும் ஈசுர லிங்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவை_உலா&oldid=3559509" இலிருந்து மீள்விக்கப்பட்டது