தேவ காந்த பருவா
இந்திய அரசியல்வாதி
தேவ காந்த பருவா (Dev Kant Barooah - D K Barooah) (22 பிப்ரவரி 1914 – 28 சனவரி 1996), இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், நெருக்கடி நிலையின் போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவராக (1975–77) இருந்தவர். 1974-ஆண்டுகளில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தியைப் புகழ்பாடும் விதமாக, இந்தியாவே இந்திரா. இந்திராவே இந்தியா (India is Indira. Indira is India.) என்ற முழக்கத்தை முதலில் முழங்கியவர்.[1] 1977-இல் 6வது மக்களவைக்கு நௌகாங் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]
தேவ காந்த பருவா | |
---|---|
தேவ காந்த பருவா (1976) | |
பிறப்பு | 22 பெப்பிரவரி 1914 திப்ருகார் |
இறப்பு | 28 சனவரி 1996 (அகவை 81) தில்லி |
1 பிப்ரவரி 1971 முதல் 4 பிப்ரவரி 1973 முடிய பிகார் மாநிலத்தின் ஆளுநராகச் செயல்பட்டவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ram Guha, India After Gandhi, p. 467
- ↑ India 6th Lok Sabha (General) Election Results – 1977 - India 6th Lok Sabha (General) Election Results – 1977 - அசாம்