தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி

தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி தேவகோட்டை நகரில் திருச்சி-இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து A தர விளையாட்டுத்திடலுடன் அமைந்துள்ளது. பள்ளி வளாகத்தினுள் பெரிய, நவீன வசதிகளை உள்ளடக்கிய பிரித்தோ இல்லம் என்னும் விடுதி செயல்பட்டு வருகிறது. மதுரை மறைமாநில சேசுசபை அருட்தந்தையர்களால் நிர்வகிக்கப்படும் இப்பள்ளி கிராமப்புற ஏழை-எளிய மக்களின் கல்வி மற்றும் வாழ்வியல் தரம் உயர்த்துதலில் தொண்டு மனப்பான்மையோடு தொய்வின்றித் தொடர்ந்து 80 ஆம் ஆண்டில் செயலாற்றி வருகிறது. தற்போது இப்பள்ளியில் 2465 மாணவர்கள் படித்து வருகின்றனர்.6 சேசுசபை நிர்வாகிகளும், 64 ஆசிரியர்களும், 13 அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.

தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, தேவகோட்டை.
அமைவிடம்
திருப்புத்தூர் சாலை, இராம்நகர் தேவகோட்டை, தமிழ் நாடு.
தகவல்
தொடக்கம்08-06-1943
நிறுவனர்அருட்திரு.பொனோர் ஆல்பிரெட் சே.ச
பள்ளி மாவட்டம்சிவகங்கை
கல்வி ஆணையம்முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்
பள்ளி இலக்கம்04561 -262290,272290
தலைமை ஆசிரியர்அருட்திரு.பெ.ஆரோக்கியசாமி சே.ச
தரங்கள்ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை
பால்ஆண்கள்
மாணவர்கள்2230
கல்வி முறைதமிழ்நாடு மாநில பள்ளிக் கல்வித் திட்டம்- தமிழ் & ஆங்கிலவழிக்கல்வி

வரலாறு தொகு

அருட்திரு.பொனோர் ஆல்பிரெட் சே.ச (பின்னாளில் மதுரை மறைமாநில சேசுசபை துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்தவர்) 1939ஆம் ஆண்டு கூத்தலூர்  பங்கில் பணியாற்றிய பொழுது கூத்தலூரிலிருந்து  தேவகோட்டை வழியாக சருகணிக்கு அடிக்கடி மாட்டு வண்டியில் வருவது வழக்கம். வரும் வழியில் திருப்புத்தூர் சாலையில் ஒரு புளிய மரத்தடியில் மாட்டு வண்டியை நிறுத்தி ஓய்வெடுப்பதுண்டு. அப்போது மறவநாட்டில் மறைசாட்சியாய் உயிர் நீத்த தூய அருளானந்தர் நினைவாக தேவகோட்டையில் ஒரு பள்ளிக் கூடம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் உதித்தது. தேவகோட்டையில் இடம் வாங்குமாறு அப்போதைய சருகணி பங்குத்தந்தை அருட்திரு. பிளாஞ்சார்டு சே.ச அவர்களைப் பணித்தார்.

  • 1940 ஆம் ஆண்டில் 24 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் வாங்கப்பட்டது.
  • 1941 இல் பங்கு ஆலயம், இயேசு சபை தந்தையர் இல்லம் கட்டப்பட்டன.
  • 1942 ஆம் ஆண்டு துவங்கப்பட இருந்த பள்ளி துவங்குவதில் அரசு அங்கீகாரம் கிடைக்கத் தாமதம் ஆனது. ஆனால் பெண்கள் பள்ளி தொடங்கிக்கொள்ளுமாறு கல்வித்துறை உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.
  • 1942 இல் மதுரையிலிருந்து தூய வளன் சபை அருட்சகோதரிகள் மே மாத விடுமுறையில் வரவழைக்கப்பெற்றனர். பெண்கள் பள்ளி தொடங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஜூலை- நவம்பர் 1942 தே பிரித்தோ பள்ளிக் கட்டிடத்தில் தூய மரியன்னை பெண்கள் பள்ளி தொடங்கப்பெற்று தூயவளன்சபை அருட்சகோதரிகள் மூவருடன் தூய அமல அன்னை சபை அருட்சகோதரிகள் நால்வரும் இணைந்து மாணவிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தனர்.
  • 1942 ஆம் ஆண்டின் இறுதியில் அருட்தந்தை ஸ்தனிஸ்லாஸ் சொக்கையா சே.ச அவர்களின் தீவிர முயற்சியால் சென்னை கவர்னர் சர் ஆர்தர் போப் அவர்களின் ஆதரவால் பள்ளி துவங்கிட அரசின் அனுமதி கிடைத்தது.
  • 08.06.1943 அன்று பள்ளி தொடங்கப்பட்டது. அப்போது 228 மாணவர்களைக் கொண்ட நடுநிலைப் பள்ளியாக இருந்தது.
  • 04.02.1944  இல் அரசின் தற்காலிக ஏற்பையும் 1947 இல் அரசின் நிரந்தர ஏற்பையும் பெற்றது.
  • 1968 ஜூலை 14- 21 நாட்களில் தே பிரித்தோ பள்ளியின் வெள்ளி விழாத் தொடக்க நிகழ்வு மாநில சட்ட மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் மாதவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிறைவு விழாவில் ஏசுநாதரின் வாழ்க்கை வரலாற்றை பிச்சைக்குட்டி பாகவதர் கதாகாலேட்சபமாக நிகழ்த்தினார்.
  • 01.06.1978 அன்று அருட்தந்தை டி.எம்.மத்தாய் சே.ச அவர்கள் தலைமையாசிரியராக இருந்தபோது உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
  • 1993 பிப்ரவரியில் பொன்விழா கொண்டாடப்பட்டது. திருச்சி கலைக்காவிரியின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் தொகு

  • சிறுகதை மன்னர் எஸ்.எஸ்.தென்னரசு
  • திரு.வி.க விருதாளர் ச.பா.அருளானந்தம்
  • நகைச்சுவை நாவுக்கரசர் கண.சிற்சபேசன்
  • முதுபெரும் திரை இயக்குநர் SP.முத்துராமன்
  • காப்பியப்புலவர் ம.அருள்சாமி
  • முதுபெரும் இதழியலாளர் கயல்தினகரன்
  • பொற்கிழிக்கவிஞர் முனைவர்.சவகர்லால்
  • மேனாள் தேர்தல் ஆணையர் மலைச்சாமி இ.ஆ.ப
  • மேனாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன்
  • புலவர்.ம.சவரிமுத்து
  • வெட்டிவயல் வளவன்
  • எழுத்தாளர் கி.தூயவன்
  • மேதகு ஆயர் செ.சூசைமாணிக்கம்
  • சிறுகதையாசிரியர் மருத்துவர் ஹிமானாசையத்
  • மேனாள் துணைவேந்தர் சோம.இராமசாமி
  • மேனாள் நடுவண் அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன்
  • கவிஞர் ஊடிவயலார்
  • அறிவியலறிஞர் மி.நோயல்
  • கவிஞர் செம்பை.சேவியர்
  • கலையருவி இராசி.சேவியர்
  • நீதியரசர் முருகேசன்
  • நடிகர் விஜயகாந்த்
  • பேரா.உ.இராசு
  • பேரா.சு.இராசாராம்
  • சின்னத்திரை இயக்குநர்
  • கோலங்கள் திருச்செல்வம்
  • தெலுங்குத் திரை இயக்குநர் கருணாகரன்
  • பதிப்பகச்செம்மல் கவிதா சேது.சொக்கலிங்கம்
  • ஆசிய தடகள தங்கப்பதக்க வீரர் சார்லஸ் புரோமியோ
  • பேரா.எம்மார்.அடைக்கலசாமி
  • நீதியரசர் ஆபிரகாம் லிங்கன்
  • பேச்சாளர் தேவகோட்டை இராமநாதன்
  • திரைப்படப் பின்னணிப் பாடகர் அபி
  • விஜய் தொலைக்காட்சியின் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு வெற்றியாளர் மு.இராகவேந்திரன்
  • SPEAK FOR INDIA வெற்றியாளர் இரா.விஸ்வா

உள்ளிட்ட பலர்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு