தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை
தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை (ஆங்கிலம்: Taiping Zoo;மலாய் : Zoo Taiping) என்பது மலேசியாவின் பேராக், தைப்பிங்கில் உள்ள புக்கிட் லாரூட்டில் அமைந்துள்ள ஒரு விலங்குக் காட்சிச்சாலை ஆகும். 1961-ல் நிறுவப்பட்ட தைப்பிங் உயிரியல் பூங்கா மலேசியாவின் பழமையான உயிரியல் பூங்காவாகும்.[2][3][4]
தைப்பிங் விலங்குக் காட்சிச்சாலை | |
---|---|
4°51′14″N 100°44′0″E / 4.85389°N 100.73333°E | |
அமைவிடம் | தைப்பிங், பேராக், மலேசியா |
நிலப்பரப்பளவு | 34 ஏக்கர்கள் (14 ha) |
விலங்குகளின் எண்ணிக்கை | 1500 |
உயிரினங்களின் எண்ணிக்கை | 180 |
உறுப்புத்துவங்கள் | தென்கிழக்கு விலங்குக் காட்சிச்சாலை சங்கம்[1] |
வலைத்தளம் | zootaiping |
இது மலேசியாவில் உள்ள முக்கிய விலங்கியல் பூங்காக்களில் ஒன்றாகும். இது 36 ஏக்கர்கள் (15 ha) பரப்பளவில் 180 வகையான நீர்நில வாழ்வன, பாலூட்டிகள் மற்றும் ஊர்வன என 1300 விலங்குகளைக் காட்சிப்படுத்துகிறது.[5] இரவு பயணம் மூலம் விலங்குகளைக் காண வசதியும் உண்டு.[6] வட மலேசியாவில் உள்ள ஒரே உயிரியல் பூங்கா இது என்பதால், அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மலேசியாவின் தேசிய மிருகக்காட்சிசாலை (மிருககாட்சிசாலை நெகாரா) மற்றும் மலாக்கா மிருகக்காட்சிசாலையுடன் ஒப்பிடும்போது, இங்கு அதிக எண்ணிக்கையிலான குச்சவால் சிறுகுரங்குகாணப்படுகின்றது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "SEAZA Membership List". seaza.org. SEAZA. பார்க்கப்பட்ட நாள் 5 August 2011.
- ↑ Seong, Mak Yim (15 December 2004).
- ↑ "Sister Zoo for Taiping Zoo Planned". (27 October 2004).
- ↑ The Department of Veterinary Services, Perak, Jabatan Perkhidmatan Haiwan, Perak.
- ↑ About the Zoo --About Us
- ↑ Night Safari --Night Safari Main
- ↑ Stump-Tailed Macaque --The Star