தைமுலின் (Thymulin) அல்லது தைமசு காரணி (Thymic Factor; Facteur Thymique Serique) என்னும் நவப்புரதக்கூறு (nonapeptide) தைமசின் இரண்டு வெவ்வேறானப் புறத்தோல் உயிரணுக்களால் உருவாக்கப்படும் ஒரு இயக்குநீராகும்[1]. இதன் உயிரியல் செயற்பாடுகளுக்கு துத்தநாகம் தனிமம் தேவைப்படுகிறது.

தைமுலின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2''S'')-4-அமினோ-2-[[(2''S'')-2-[[2-[[2-[[(2''S'')-5-அமினோ-2-[[(2''S'')-2-[[(2''S'')-6-அமினோ-2-[[(2''S'')-2-[[(2''S'')-5-ஆக்சோ பிரொலிடின்-2- கார்போனைல்]அமினோ]புரபொனோயில்]அமினோ]எக்சோனோயில்]அமினோ]-3-ஐதராக்சி புரபொனோயில்]அமினோ]-5-ஆக்சிபென்டனோயில்]அமினோ]அசெடைல்]அமினோ]அசெடைல்]அமினோ]-3-ஐதராக்சி புரபொனோயில்]அமினோ]-4-ஆக்சோ பியூட்டனோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
63958-90-7 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3085284
SMILES
  • CC(C(=O)NC(CCCCN)C(=O)NC(CO)C(=O)N
    C(CCC(=O)N)C(=O)NCC(=O)NCC(=O)NC(CO)C(=O)N
    C(CC(=O)N)C(=O)O)NC(=O)C1CCC(=O)N1
பண்புகள்
C33H54N12O15
வாய்ப்பாட்டு எடை 858.85 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இந்த இயக்குநீர் "டி" செல்கள் வேறுபாடடைவதிலும், "டி" மற்றும் இயற்கையாகக் கொல்லும் உயிரணுக்களின் (என்.கே. செல்கள்) செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்வதிலும் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது.[1]. தைமசை சார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பின் மீதான பக்கச்சுரப்பு, தன்சுரப்பு விளைவுகளைத் தவிர நரம்பியஉட்சுரப்பு (neuroendocrine) விளைவுகளையும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தைமசின் புறத்தோல் உயிரணுக்கள், ஐப்போதலாமசு-கபச் சுரப்பி அச்சுக்கிடையேயான இருவழித் தொடர்புகளில் தைமுலின் ஈடுபட்டுள்ளது (உதாரணமாக, தைமுலின் சுரப்பு பருவ-பொழுது ஒழுங்கியல்பைப் (circadian rhythm) பின்பற்றுகிறது; உடலியக்க அண்ணீரகப் புறணியூக்க இயக்குநீர் அளவுகள் அதிகரிப்பது ஊனீரில் தைமுலின் அளவுகளுடன் நேர்முறையாகவும், மறுதலையாகவும் இயைந்துள்ளது.[2]).

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Bach J, Bardenne M, Pleau J, Rosa J (1977). "Biochemical characterisation of a serum thymic factor". Nature 266 (5597): 55–7. doi:10.1038/266055a0. பப்மெட்:300146. 
  2. Hadley AJ, Rantle CM, Buckingham JC (1997). "Thymulin stimulates corticotrophin release and cyclic nucleotide formation in the rat anterior pituitary gland". Neuroimmunomodulation 4 (2): 62–9. பப்மெட்:9483196. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைமுலின்&oldid=2746332" இலிருந்து மீள்விக்கப்பட்டது