தைரா மிர் மோமின்
ஐதராபாத்தில் அமைந்துள்ள ஒரு கல்லறை
தைரா மிர் மோமின், (Daira Mir Momin) தைரா-இ-மிர் மோமின் என்றும் அழைக்கப்படுகிறது), இது ஐதராபாத்து பழைய நகரத்தில் அமைந்துள்ள இசுலாமியக் கல்லறை ஆகும். [1] [2] [3] [4]
Details | |
---|---|
Established | 16ஆம் நூற்றாண்டு |
Location | பழைய நகரம், ஐதராபாத்து, இந்தியா |
Find a Grave | தைரா மிர் மோமின் |
வரலாறு
தொகுஇது 16 ஆம் நூற்றாண்டில் குதுப் ஷாஹிகளின் காலத்தில் கோல்கொண்டா சுல்தானகத்தின் அமைச்சராகவும் ஐதராபாத்து நகரின் திட்டமிடுபவராகவும் இருந்த மிர் மோமின் அஸ்தராபாடியின் கல்லறையைச் சுற்றி நிறுவப்பட்டது. [5] [6] கர்பலாவிலிருந்து ஒட்டகம் சுமக்கும் அளவு கனமான மண்ணைக் கொண்டு வந்து கல்லறை முழுவதும் தூவுமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது. [7] [8]
தற்போது கல்லறை மோசமான நிலையில் உள்ளது. மேலும், பல சட்டவிரோத கட்டுமானங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. [9]
குறிப்பிடத்தக்க புதைகுழிகள்
தொகு- மீர் மோமின் அஸ்தராபாடி [1]
- ஐதராபாத்தின் முன்னாள் பிரதமர் மிர் ஆலம் .
- ஐதராபாத்தின் முன்னாள் பிரதமர் முதலாம் சலார் ஜங்
- ஐதராபாத்தின் முன்னாள் பிரதமர் இரண்டாம் சலார் ஜங் .
- ஐதராபாத்தின் முன்னாள் பிரதமர் மூன்றாம் சலார் ஜங்
- இளவரசர் மோசம் ஜா
- இந்துசுத்தானி செவ்விசை பாடகர் படே குலாம் அலி கான்[10]
மிர் மோமின் கல்லறை
தொகுகல்லறையின் மையத்தில் அமைந்துள்ள மிர் மோமின் புதைகுழியில் பல பாரசீக கல்வெட்டுகள் உள்ளன. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Landmarks of the Deccan: A Comprehensive Guide to the Archaeological Remains of the City and Suburbs of Hyderabad (in ஆங்கிலம்).
- ↑ "Daira Mir Momin in shambles" (in en). https://www.deccanchronicle.com/nation/current-affairs/100418/daira-mir-momin-in-shambles.html.
- ↑ "VVIP graveyard a sad picture of neglect" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
- ↑ "Here sleeps the earliest urban planner" (in en-IN). https://www.thehindu.com/news/cities/Hyderabad/here-sleeps-the-earliest-urban-planner/article4827466.ece.
- ↑ "Here sleeps the earliest urban planner".
- ↑ "Viola! Not 2, world has 84 Hyderabads".
- ↑ "Remembering the man behind Charminar's architecture". பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.
- ↑ "Andhra Pradesh / Hyderabad News : Restoration with a royal touch". 2005-07-04. பார்க்கப்பட்ட நாள் 2018-11-11.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Resting places of the dead also encroached!". The New Indian Express. http://www.newindianexpress.com/cities/hyderabad/2018/jun/01/resting-places-of-the-dead-also-encroached-1822276.html.
- ↑ Today, Telangana (2021-03-28). "Hyderabad: Ustad Bade Ghulam Ali Khan's tomb being restored" (in அமெரிக்க ஆங்கிலம்).